உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 - நினைவு அலைகள் முதல் வகுப்பில் தாய்மொழியும் மூன்றாம் வகுப்பில் ரஷ்ய மொழியும் ஐந்தாம் வகுப்பில் பிறநாட்டு மொழி ஒன்றும் தொடங்கிக் கற்பிக்க வேண்டும். இவ் வரம்புகளை மீறாமல் பாட அமைப்புகளை அந்தந்தக் குடியரசே முடிவு செய்து கொள்ளும். எல்லாம் இலவசம் பல்கலைக் கழகப் படிப்புக்கூட இலவசம் என்பதை இங்கே சொல்ல வேண்டும். எத்தனை பட்டங்களுக்குப் பயிற்சி பெற்றாலும் சம்பளம் கட்டத் தேவை இல்லை. பல்கலைக் கழகங்களில் எந்த அடிப்படையில் சேர்க்கிறார்கள்? பள்ளிக்கூடத்தில் பெற்ற மதிப்பெண், தகுதி முதலியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு சேர்க்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் அவற்றிற்கு இணையாக உயர்கல்விக் கழகங்களில் கற்கும் எல்லா மாணாக்கருக்கும் உபகாரச் சம்பளம் உண்டு. அது அவர்கள் பராமரிப்புக்குப் போதுமானது. பல்கலைக் கழகத்தில் முழு நேரப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால், பகுதிநேரப் படிப்பிற்கோ, அஞ்சல் வழிப் படிப்பிற்கோ வாய்ப்பு உண்டு. வேலையில் இருந்துகொண்டே, அப்படிப் படிப்பவர்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை, போக்குவரத்துக் கட்டணச் சலுகை, போன்ற உதவிகளைச் சம்பந்தப்பட்ட தொழிற்கூடமோ, அலுவலகமோ செய்து கொடுக்கும். இரு பல்கலைக் கழகங்கள் o சோவியத் நாட்டின் தலைநகராகிய மாஸ்கோவில் இரு பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. ஒன்று தொன்மையானது; அதன் பெயர் மாஸ்கோ அரசு பல்கலைக் கழகம். மற்றொன்று சோவியத் ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பெயர் லுமும்பா நட்புறவுப் பல்கலைக் கழகம், சோவியத் நாட்டில் எல்லாப் பல்கலைக் கழகங்களுமே அரசின் செலவில் நடப்பவையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/529&oldid=788340" இலிருந்து மீள்விக்கப்பட்டது