பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் நாட்டில் விரைவான கல்வி வளர்ச்சி 491 லுமும்பா பல்கலைக் கழகம் ஏற்படுத்தத் தனிக் காரணமே உண்டு. - காரணம் என்ன? சோவியத் நாட்டின் தந்தை மாமேதை லெனின், “சோவியத் ஆட்சியும், சோவியத் நாடும் பிற அமைப்புகளையுடைய நாடுகளோடும், ஆட்சிகளோடும் சமாதான சகவாழ்வு' வாழ்வதோடு, அந் நாடுகளுக்கு முடிந்த வகையில் எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்” என்று நெறிப்படுத்தினார். எனவே, சோவியத் ஆட்சி புதிதாக விடுதலை பெறும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளுக்குப் பொருளியல், நுட்பத்தொழில் இயல், கல்வியியல் போன்ற பல துறைகளில் பேருதவி செய்து வருகிறது. அவ் வுதவிகளில் ஒருவகை வளரும் நாடுகளின் இளைஞர் களை அழைத்துவந்து பலவகைக் கல்வி புகட்டி பயிற்சி கொடுத்து அனுப்புவதாகும். 1. அந்தச் சிறப்புப் பணிக்காக நட்புறவுப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. லுமும்பாவின் பெயர் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவருள் ஒருவரான லுமும்பா என்பவர் ஆப்பிரிக்காவுக்கு அமைதிப் பணிக்காகச் செல்கையில் அவரது விமானம் 1961இல் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலக அமைதிப் பிரியராகிய லுமும்பாவின் தொண்டையும் நினைவையும் போற்றும் வகையில், அந்த நட்புறவுப் பல்கலைக் கழகத்திற்கு, அவர் பெயரைச் சூட்டினர். அப் பல்கலைக் கழகத்தில் எண்பத்தைந்து நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்து அய்ந்நூறு மாணாக்கர் சேர்ந்து படிப்பதைக் கண்டோம். அவர்களில் இந்திய மாணாக்கர் எண்ணிக்கைதான் அதிகம். அவர்கள் தேர்ச்சி எப்படி? நூற்றுக்கு 98.6 விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகிறார்கள். கருத்துச் சிதறல் இல்லை அதை அப்படிப் பல்கலைக் கழகத் தலைவரிடம் இருந்து கேட்ட போது, என் பூரிப்புக்கு எல்லையே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/530&oldid=788342" இலிருந்து மீள்விக்கப்பட்டது