பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 m நினைவு அலைகள் ஆம்! நம் பிள்ளைகள் படித்து முதன் முறையே தேர்ச்சி பெறக்கூடியவர்கள். உள்நாட்டில் படிக்கும்போது அவர்களை எத்தனையோ சிறிய பெரிய விவகாரங்களில் இழுத்துவிட்டு விடுகிறோம். கவனச் சிதைவு ஏற்படுத்துகிறோம். கற்பதில் இருக்க வேண்டிய நாட்டம் வேறு எது எதிலோ போய்விடுகிறது. எனவே மார்ச்சு, செப்டம்பர் என்று மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய அவலநிலை உருவாகிறது. தென்னிந்தியப் பிராமணர் இப்போது, சுவையான நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் சோவியத் நாட்டிற்கு முதன் முறை சென்றபோது, திரு. ஜே. பி. நாயக் என்பவர், இந்தியக் கல்வி அமைச்சகத்தில் தொடக்கக் கல்வி பற்றிய கெளரவ ஆலோசகராக விளங்கினார். அவர் என்பால் பெரிதும் அன்பு கொண்டவர். சோவியத் நாட்டிற்கு, நான் புறப்பட இரண்டு நாள்கள் இருக்கையில், அவர் என்னைப் புது தில்லியிலுள்ள, தென் இந்திய உணவுச் சாலைக்கு அழைத்துச் சென்றார்; நல்ல விருந்தளித்தார். விருந்துக்குப்பின்,"பில் எவ்வளவு என்று கேட்டார். பரிமாறினவர், ஒன்றுமில்லை என்று பதில் சொன்னார். திரு. நாயக், வியப்பில் ஆழ்ந்தார். உணவுச்சாலை முதலாளியை அழைத்துக் கேட்டார். “எங்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குப் பகல் உணவு போட ஏற்பாடு செய்து வருகிற பெரியவரிடம், காசு வாங்கலாமா? அவருக்கு உணவு அளித்ததில் எனக்குப் பெரும் புண்ணியம் உண்டு. அடிக்கடி அவரை இங்கு அழைத்து வாருங்கள்” என்று முதலாளி பதில் கூறினார். எவ்வளவோ வற்புறுத்தியும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. “எங்கோ, எவர் எவருக்கோ செய்யும் உதவியை விழிப்பாகக் கவனித்து, அதற்குக் கருவியாகப் பயன்படும் உங்களுக்கு மரியாதை செய்யும் தென்னிந்தியப் பிராமணர்களின் நுண்ணறிவே நல்லறிவு” என்று நாயக் பாராட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/531&oldid=788343" இலிருந்து மீள்விக்கப்பட்டது