பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

493 50. கல்வித் துறையில் குழப்பங்கள் மும்மொழித் திட்டம் பள்ளிப் படிப்புக்குப் பாடத் திட்டத்தை அமைப்பது மாநில அரசின் பொறுப்பு. அப்படி அமைத்தபின் பல்கலைக் கழகங்கள் தகுதி மதிப்பெண் - கல்லூரியில் சேர எவ்வளவு மதிப்பு எண்கள் - என்பதை முடிவு செய்து அறிவிக்கும். - வெள்ளை அறிக்கையின்படி, பதினோரு வகுப்புகள்வரை உள்ள உயர்நிலைப் பள்ளிகள் பத்து வகுப்பு உள்ள உயர்நிலைப் பள்ளிகளாக, மாற்றி அமைக்கப்பட்டன. -- அதற்கான பாடத் திட்டத்தை ஆயத்தம் பண்ணிச் சென்னை, அண்ணாமலை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பினோம். சாதாரணமாகச் சென்னைப் பல்கலைக் கழகம் என்ன மதிப்பெண்கள் என்று முடிவு செய்கிறதோ அதை அண்ணாமலை பல்கலைக் கழகம் ஏற்றுக்கொள்ளும். அம் முறையால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்குச் சிக்கல் வந்தது. அரசின் பாடத்திட்டம் மும்மொழி கற்றுக் கொடுக்கக் கட்டாயப்படுத்திற்று. எனவே, மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்த இந்தி அல்லது பிறமொழிக்குத் தேர்வு மதிப்பு எண் கேட்பதா, இல்லையா என்பதே அச் சிக்கல். லட்சுமணசாமி முதலியார் சமாளித்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார், அதைத் திறமையாகச் சமாளித்தார். பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் அரசின் ஒரே பிரதிநிதியாகிய என்னைத் தனியே அழைத்துப் பேசினார். நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, மூன்றாவது மொழி கற்பது மேல் படிப்புக்கு இடையூறாகக் கூடாது. "அதே நேரத்தில் முயன்று கற்று, நல்ல மதிப்பெண் பெறுகிறவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/532&oldid=788344" இலிருந்து மீள்விக்கப்பட்டது