உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 நினைவு அலைகள் இந்த முடிவுக்கு வந்த பிறகு, வழியைச் சொன்னார். “மூன்றாவது மொழியில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கூடப் பெறவில்லை என்றாலும் கல்லூரிக்குச் செல்லலாம். "அதே நேரத்தில், மூன்றாவது மொழியில் 50க்கு மேற்பட்ட மதிப்பெண் பெறுகிறவர், வேறொரு பாடத்தில் மதிப்பெண் குறைந்தாலும் மேல் படிப்புக்குச் செல்லலாம். “எவ்வளவுவரை மதிப்பெண் குறையலாம்? ஐந்து மதிப்பெண் வரை குறையலாம். “அதற்கு ஈடாக மூன்றாவது மொழியில் இரட்டிப்பு அதாவது பத்து மதிப்பெண் கூடுதலாகப் பெறவேண்டும். "அப்படியென்றால், ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்தால் அதை ஈடு செய்ய மூன்றாவது மொழியில் 50க்கு மேல் இரண்டு அதாவது ஐம்பத்திரண்டு மதிப்பெண் பெறவேண்டும். மூன்று மதிப்பெண் குறைந்தால் மூன்றாவது மொழியில் 56 மதிப்பெண்கள் பெறவேண்டும். “இம் முறையில், முடிவு செய்வோம்” என்று துணைவேந்தர் லட்சுமணசுவாமி முதலியார் என்னிடம் கூறினார். அரசு இதில் குறுக்கிடாதபடி, பார்த்துக் கொள்ளச் சொன்னார். 'பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி உரிமையில் கல்வி அமைச்சர் தலையிடுவதில்லை’ என்று முடிவு செய்திருப்பதை வெளிப்படுத்தினேன். "நாம் தனியாகப் பேசியதை எவரிடமும் சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கூடிய வரையில் இதுபற்றி மெளனியாக இருக்கும்படியும் என்னைக் கேட்டுக் கொண்டார். அதேபோல் அவர் சில மூத்த ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் தனித்தனியே பேசினார். பின்னர் ஆட்சிக் குழுவில் மதிப்பெண் சூத்திரத்தை ஆலோசனைக்கு வைத்தார். == ஆர்வத்தோடு படிப்பவனுக்கு உதவும் வகையிலும் புறக்கணிப்போர்க்குக் கேடு விளையாத வகையிலும் சூத்திரம் வகுத்து இருப்பதை உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். மகிழ்ச்சியோடு ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/533&oldid=788345" இலிருந்து மீள்விக்கப்பட்டது