பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் துறையில் குழப்பங்கள் 495 மேற்படி சூத்திரம் முறைப்படி பல்கலைக் கழகக் கல்விக் குழுவின் முடிவுக்கு வைக்கப்பட்டது. அக் குழுவும் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அடுத்து, பேரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அறிஞரின் கண்டனம் இதற்கிடையில் ஒரு கல்லூரி விழாவில் உரையாற்றிய அறிஞர் ஒருவர், இதைக் கண்டித்துப் பேசினார். ப்ாடம் என்று ஒன்றை வைத்தபிறகு, அதில் தேர்ச்சி பெற எவ்வளவு மதிப்பெண் தேவை என்று குறிக்காதிருப்பது தவறு என்பது அப் பெரியவரின் வாதம். அப் பேச்சின் விளைவாக, மதிப்பெண் பற்றிய சூத்திரத்திற்குத் திருத்தத் தீர்மானம் ஒன்று வந்தது. 35 மதிப்பெண் வேண்டும் ஒரு கல்லூரி முதல்வர் மூன்றாவது மொழிக்குக் குறைந்தது 35 மதிப்பு எண்கள் வேண்டும் என்று திருத்தம் அனுப்பினார். அவ்வமயம், நான் சோவியத் நாடு சென்று இருந்தேன். முறைப்படி சென்னைப் பல்கலைக் கழகம், மூல சூத்திரத்தையும் அதற்கு வந்திருந்த திருத்தத்தையும் அச்சிட்டுப் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி இருந்தது. தாய்நாடு திரும்பியதும் நான் அதைப் பார்தேன். பெரும்பான்மை பலம் பெரிய வழக்கும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அஞ்சினேன். எனவே, டாக்டர் லட்சுமணசாமி முதலியாரைப் பேட்டி கண்டேன். வந்த விபரத்தைச் சொன்னதும் பல்கலைக் கழகச் சட்டத்தை எடுத்து உரிய பக்கத்தைத் திறந்து, குறிப்பிட்ட விதி முறையைப் படிக்கச் சொன்னார். விதிமுறை என்ன சொல்லிற்று? கல்விக் குழுவின் முடிவைப் பேரவை மாற்றுவதனால் இம் மாறுதலுக்கு ஆதரவாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளாவது பதிவாக வேண்டும் என்று அவ் விதி சொல்லிற்று. டாக்டர் முதலியார், “பெரும்பான்மை கிடைத்தாலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்கு கிடைக்காது. தீர்மானம் தோற்றுப் போகும். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/534&oldid=788346" இலிருந்து மீள்விக்கப்பட்டது