பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 நினைவு அலைகள் பொது மக்கள் எதிர்ப்பு "ஐயா, இது யாருக்குப் பலம் இருக்கிறது என்று சோதனை போடும் விவகாரம் அல்ல. "அவர்கள் தோற்றுப்போனால், கசப்பு அதிகமாகப் பரவும். வெற்றி பெற்றால், பொது மக்கள் எதிர்த்துப் போராடுவார்கள். எனவே, எச் சாராருக்கும் வெற்றி தோல்வி, என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல், இதைச் சமாளிக்க வேண்டும்” என்றேன். அப்படியானால் “உங்கள் யோசனை என்ன?” என்று துணைவேந்தர் கேட்டார். சோவியத் அனுபவம் “சோவியத் நாட்டில் எல்லாப் பிள்ளைகளும் மும்மொழி கற்கிறார்கள். ஆனால், இரு மொழிகளில் தேர்ச்சி பெற்றால், மேல் வகுப்புக்குப் போகலாம். “அதை நான் பேரவையின் முன் சொல்ல வாய்ப்புக் கொடுங்கள். அதைச் சொல்லிவிட்டு, வாக்கெடுப்பிற்கு வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன். தாங்களும் வாக்கெடுப்புக்கு வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால், சுமூகமாக, முடிந்துவிடும்” என்றேன். துணைவேந்தர் அதற்கு இசைந்தார். ** பேரவைக் கூட்டத்தில் குறிப்பிட்ட திருத்தத் தீர்மானம் முறைப்படி முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. ஆதரவு அடுத்து திரு. தி. சு. அவினாசிலிங்கம் பேச விரும்பினார். துணைவேந்தர் இடம் கொடுத்தார். அவர் பேசுகையில், “வட மாநிலங்களில், மும்மொழிக் கொள்கை நடை முறையில் இல்லை. நாம்தான் நடைமுறைப் படுத்துகிறோம். அதுவே பெரிய காரியம். “குறிப்பிட்ட மதிப்பெண் வேண்டும் என்று வற்புறுத்திப் பல மாணாக்கர்களைத் தோல்வி அடையச் செய்யாதீர்கள். “மாணாக்கர் மிரண்டு விட்டால் மூன்றாவது மொழிப் பகுதியில் இந்தி எடுப்பவர் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, முந்திய முடிவை அப்படியே விட்டுவிடலாம்” என்று கூறியது, ஆதரவாக இருந்தது. வேறு சிலர் பேசிய பிறகு துணை வேந்தர் என்னைப் பேச அழைத்தார். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/535&oldid=788347" இலிருந்து மீள்விக்கப்பட்டது