பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் துறையில் குழப்பங்கள் 497 சோவியத் எடுத்துக்காட்டைக் கூறி, "இப்போதைக்கு ஏற்கெனவே ஏற்கப்பட்ட சூத்திரத்தை அப்படியே வைத்து இருப்போம்; சில ஆண்டுகளுக்கு அது செயல்படட்டும். “தேவைப்பட்டால், நமக்குப் பின்னால் வருபவர்கள், மறு பரிசீலனை செய்யட்டும். திருத்தத்தின் பேரில் வாக்கெடுப்பு வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம்” என வேண்டிக் கொண்டேன். நான் பேசி முடித்ததும் துணைவேந்தர் என் ஆலோசனையை ஆதரித்தார். பேரவை ஏற்றுக்கொண்டது. வாக்கெடுப்பு இல்லை. மூல சூத்திரம் அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டது. நாள் இதழ்கள் கண்டனம் அடுத்த நாள், பல நகரங்களிலிருந்து வெளிவரும் ஆங்கில நாள் இதழ் ஒன்று, நான் இந்தி பற்றி எடுத்த நிலையைக் கண்டித்துத் தலையங்கம் எழுதி இருந்தது. 'அரசு இந்தியைக் கற்றுக் கொடுப்பதுபோல் நடிக்கிறது; அதன் தலைமைக் கல்வி அலுவலர் இந்தியில் தேர்வுக்கு மதிப்பெண் தேவையில்லை என்று வெளிப்படையாகவே வாதிடுகிறார். இது முறையல்ல என்று எழுதிற்று. அதேபோல், தமிழ் நாளிதழ் ஒன்றும் கண்டித்தது. தமிழக அரசு பதில் அப்போதைய மாநில ஆளுநர் திரு. விஷ்ணுராம் மேதி, ஒரு கடிதம் எழுதி, மேற்படி கண்டனம் பற்றி முதலமைச்சரின் கருத்தைக் கேட்டார். அதேபோல் புது டில்லியில் இருந்து உள்துறை அமைச்சர் ஜி. பி. பந்த் விளக்கம் கேட்டு முதலமைச்சருக்கு எழுதினார். இவை எனக்குத் தெரியாது. இவற்றிற்கு என்னைக் கேட்காமலேயே, பதில் எழுதி அனுப்பி விட்டார்கள். என்ன பதில்? “பல்கலைக் கழகம் தன்னாட்சி உரிமை உடையது. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் போக விழை வோருக்கு எந்தெந்தப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/536&oldid=788348" இலிருந்து மீள்விக்கப்பட்டது