உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 நினைவு அலைகள் வேண்டும் என்று முடிவு செய்வது, பல்கலைக் கழகத்தின் உரிமையில் அடங்கியதாகும். “அரசு அத்தகைய விவகாரங்களில் தலையிடுவது கிடையாது. “பொதுக்கல்வி இயக்குநரைப் பொறுத்தவரை கல்வித் துறையின் தலைமை ஆலோசகர் அவர்தான். “குறிப்பிட்ட துறையின் வல்லுநர்களின் சிந்தனையில் தலையிடுவது இந்த அரசின் மரபு அல்ல. பொதுக்கல்வி இயக்குநர் கருத்து தெரிவித்ததில் முறைகேடு ஏதும் இல்லை” என்று இருவருக்கும் பதில் போயிற்று. பல நாள் கழித்து, பதிலின் படி ஒன்றைக் கல்வி அமைச்சர் எனக்குக் காட்டினார். என்னால் அரசுக்குத் தொல்லை வந்ததே என வேதனைப் பட்டேன். புதிய திட்டத்தின் கீழ் முதலாண்டு பள்ளி இறுதித் தேர்வு எழுதியவர்களில், நூற்றுக்கு, மேற்பட்டவர்கள் இச்சூத்திரத்தால் நன்மை பெற்றார்கள். அடுத்த ஆண்டு இருநூறு பேர்கள்போல் இந்தியில் பெற்ற அதிக மதிப்பு எண்களால் வெற்றி பெற்றார்கள். மூன்றாம் ஆண்டு நானுாறு பேர்கள்போல் நன்மை அடைந்தார்கள். நேரு பெருமைப்படுத்தினார் 1962 ஆம் ஆண்டு, பெரியதோர் கல்வி மாநாட்டோடு தொடங்கிற்று எனலாம். புது டில்லியில், யுனெஸ்கோ சார்பில் ஆசிய நாடுகளுக்கான கல்வி மாநாடு நடைபெற்றது. r நான்கு வாரங்கள் நடைபெற்ற இம் மாநாட்டுக்குச் சீனக் குடியரசைத் தவிர, மற்ற எல்லா நாட்டுப் பிரதிநிதிகளும் வந்து இருந்தனர். இந்தியக் குழு மிகப் பெரியது. பதின்மூவர் அடங்கிய அக் குழுவிற்கு யாரைத் தலைவராக நியமிப்பது என்கிற கேள்வி எழுந்தது. பிரதமர் நேருவே முடிவெடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/537&oldid=788349" இலிருந்து மீள்விக்கப்பட்டது