பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் துறையில் குழப்பங்கள் 499 சென்னை மாநிலப் பொதுக்கல்வி இயக்குநர், பத்மபூனி நெ. து. சுவை நியமிப்பதாக நேருவே ஆணையிட்டார். இந்தியக் கல்வி அமைச்சகத்திலிருந்த சகாக்கள் இடையே, இது என் நிலையை உயர்த்திற்று. அம் மாநாடு, சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த ஒவ்வொருவரும் கருத்துத் தெரிவிக்கப் போதிய நேரம் கிடைத்தது. மாநட்டுக்குத் தலைமை ஏற்ற நான், மிகப் பொறுமையோடு நடந்துகொண்டேன். சிலர் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பேசிய நேரத்திலும் குறுக்கிடாமல் வாய்ப்புக் கொடுத்தேன். மாநாட்டின் நிறைவு விழாவில் பலரும் என்னுடைய மேற்படி இயல்பைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்கள். முடிவுகள் கராச்சியில் நடந்ததுபோல் புது டெல்லி மாநாட்டிலும், "அந்தந்த நாட்டின் பொது மக்களைக் கல்வி வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் ஈடுபடுத்த வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது. “ஏழைப் பிள்ளைகளைப் பள்ளிக்கு இழுக்கப் பகலுணவு, இலவசப் பாடநூல்கள், சீருடைகள் முதலியன வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றும் பரிந்துரைக்கப்பட்டது. ஆசியாவின் கல்வி நிர்வாகிகளுக்கும் கல்வித் திட்டமிடு வோருக்கும் பயிற்சி கொடுப்பதற்காக, ஒரு நிறுவனத்தைப் புது தில்லியில் நிறுவுவது என்பது மிக முக்கியமான முடிவாகும். அதற்குத் தொடக்கத்தில், பத்தாண்டுகளுக்கு யுனெஸ்கோ உதவி செய்வது என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி யுனெஸ்கோவோடு ஏற்கெனவே பேசி முடிவு செய்திருந்ததால், மாநாட்டின் இறுதி நாள் அன்று, இது பற்றிய உடன்படிக்கை கையெழுத்து ஆயிற்று. நம் இந்திய அரசு சார்பில் இந்தியக் கல்வி அமைச்சகத்தின் செயலர் திரு. பிரேம் கிருபாலும், யுனெஸ்கோ சார்பில் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யாவும் கையெழுத்திட்டனர். - அந் நிறுவனம் தோன்றி, பல ஆசிய கல்வியாளருக்குப் பயிற்சி தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/538&oldid=788350" இலிருந்து மீள்விக்கப்பட்டது