உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 நினைவு அலைகள் பின்னர் முழுக்க முழுக்க இந்தியர்களுக்கே பயிற்சி கொடுக்கப் பயன்பட்டு வருகிறது. 1962 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முழுவதும் மேற்படி மாநாட்டை ஒட்டி, மாநாட்டின் தலைவன் என்கிற முறையில் நான் தில்லியில் தங்க நேர்ந்தது. அப்போது என் மனைவி காந்தம்மாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். மாநாட்டின்போது புதுதில்லியில் பாகிஸ்தானின் துதுவராக இருந்த எனது கல்லூரி நண்பர் திரு. அகா இலாலியையும் அவரது மனைவியையும் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அவர்கள், நாங்கள் கொடுத்த காலைச் சிற்றுண்டியின்போது மசால்தோசை உண்டு மகிழ்ந்தார்கள். தாய்மொழிக் கல்விக்குச் சாவு 1962இன் தொடக்கத்தில் சென்னை சட்ட மன்றத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் நடந்தது. அத் தேர்தலில் திரு. சி. சுப்பிரமணியம் சட்டமன்றத்திற்கு நிற்காமல் நாடாளுமன்றத்திற்கு நின்று வெற்றி பெற்றார். உடனே இந்திய அரசில் நேருவின் தலைமையில் அமைச் சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். மாண்புமிகு சுப்பிரமணியத்தின் இடத்தில் மாண்புமிகு மீ. பக்தவத்சலம் சென்னை மாநிலக் கல்வி அமைச்சரானார். அவர் கல்விப் பொறுப்பு ஏற்றுக் கொண்டபிறகு, கல்விக் கொள்கையிலும் நடைமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஒரு நாள், மாண்புமிகு மீ. பக்தவத்சலத்தோடு சில கோப்புகளைப் பற்றிப் பேசச் சென்றேன். அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன், அவர் “மாகாணத்தின் நகரங்களில் ஒர் ஆண் உயர்நிலைப் பள்ளியிலும் ஒரு பெண் உயர் நிலைப் பள்ளியிலும் ஆங்கிலத்தின் மூலமும் கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று அரசு மட்டத்தில் முடிவு செய்துள்ளோம். “எனவே, தொடங்கப் போகும் கல்வி ஆண்டில், மொத்தத்தில் இருநூறு உயர் நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் வாயிலாக ஒரு பிரிவு பாடம் நடத்தத் திட்டமிட்டு செயல்படுங்கள்” என்று வாய்வழி ஆணையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/539&oldid=788351" இலிருந்து மீள்விக்கப்பட்டது