உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் துறையில் குழப்பங்கள் 501 என் சங்கடம் “அய்யா, இது அரசின் ஆணையா? தங்கள் ஆலோசனையா?” என்று பணிவாகக் கேட்டேன். “அரசின் ஆணையாக, இரண்டொரு நாளில் அது, எழுத்து வாயிலாக உங்கள் கைக்கு வரும்” என்று பதில் உரைத்தார். 'அய்யா, ஆங்கில மொழி வாயிலாகக் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் போதிய அளவு கிடைப்பார்களா என்பது அய்யப்பாடு. 'இப்போதைக்கு இருநூறுக்குப் பதில், அய்ம்பது உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆறாம் வகுப்பில் ஒரு பிரிவை ஆங்கிலத்தின் வாயிலாக கற்பிப்போம். “அதில் ஏற்படுகின்ற பட்டறிவைக் கொண்டு என்ன செய்வது என்று முடிவு செய்வோம்” என்று துணிந்து கூறிவிட்டேன். எனது நல்வாய்ப்பு அவர் வெகுளவில்லை. என் மாற்றத்தை ஏற்றுக்கொண்டார். ■ முன்னர் மூதறிஞர் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை ஆதரிக்கும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டதுபோல், இப்போது ஆங்கிலப் பயிற்சி மொழியை ஆதரிக்கும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டேன் ஆணையை நிறைவேற்றினேன். அது தாய்மொழிக் கல்விக்குச் சாவுமனி அடிப்பதாகும் என்று தெற்றென விளங்கிற்று. இருப்பினும் "ஆலையில் சிக்கிய கரும்பு, சக்கையாகத்தான் வெளியே வரவேண்டும்’ என்பதும், கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே உரியது” என்பதும் புலப்பட்டதால், முணுமுணுக்காமல் அந்த ஆணையை நிறைவேற்றி ஆங்கில வெள்ளம் கரை புரண்டோடச் செய்யும் பண்ணையாள் ஆகிவிட்டேன். அய்ம்பதில் தொடங்கியது அப்படியே நிற்குமா? ஆங்கிலவழிப் பயிற்சி வளர்ந்தது பல ஊர்க்காரர்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்படி கோரினார்கள். - அவர்கள் வாக்கைத் தேட வேண்டிய அரசும் வளைந்து கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/540&oldid=788353" இலிருந்து மீள்விக்கப்பட்டது