உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 நினைவு அலைகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக உடைய உயர்நிலைப் பள்ளிகள் பலப்பலவாகப் பெருகிவிட்டன. i. பின்னர் வந்த எல்லோரும் இப் புண்ணியத்தில் பங்கு கொண்டனர். இன்று ஆங்கில வகுப்புகளுடைய உயர்நிலைப் பள்ளிகள் 1400 போல் இருப்பதாகக் கேள்வி. சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை திடீரெனக் கல்வி அமைச்சர் பக்தவத்சலனாரின் அறிவிப்பு ஒன்று வந்தது. அது என்ன சொல்லிற்று? பத்தாண்டுக் கல்வி பதினோராண்டானது "பதினோரு வகுப்பு பாடங்களைப் பத்து வகுப்புகளுக்குள், கற்பிக்க முயற்சிப்பதால், மாணவர்களுக்குச் சுமை அதிகமாகி விட்டது. "இதை அவர்களால் சமாளிக்க முடியாது. எனவே, உடனே பழைய பதினோரு வகுப்புப் பாடத் திட்டத்திற்கு மாற்றுவதற்கு அரசு வழிவகை செய்யும்” என்று அமைச்சரின் அறிவிப்பு சொல்லிற்று. இப்படிச் செய்யப் போவதாக அதற்குமுன், பேச்சு மூச்சு இல்லை. # ஆசிரிய சமுதாயத்தின் கருத்தும் அப்படிச் சொல்லவில்லை. ஏன் இந்த மாற்றம்? எனக்குப் புரியவில்லை. மெளனியானேன் எனவே, கல்வி அமைச்சரைத் தேடிச் சென்றேன். அவரைக் கண்டேன். 'அய்யா, சட்டமன்றக் குழு நீண்ட விவாதத்திற்குப் பிறகு பதினோரு ஆண்டுப் படிப்பை, பத்தாண்டுக்குள் அடக்கி விடுவதென்று பரிந்துரைத்துச் சட்டமன்றமும் ஏற்றுக்கொண்டது. "அப்படிப்பட்ட திட்டத்தை அரசு ஒர் ஆணையின் மூலம் மாற்றி விடுவது நன்றாகவா இருக்கும்? “என்னிடம்கூட ஒருசொல், சொல்லவில்லையே” என்று அமைச்சரிடம் எனது அய்யப்பாட்டை வெளிப்படுத்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/541&oldid=788354" இலிருந்து மீள்விக்கப்பட்டது