உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் துறையில் குழப்பங்கள் 503 மாண்புமிகு பக்தவத்சலனார் அவருக்கே உரிய ஆழ்கடல் அமைதியோடு பதில் கூறினார். "நேற்று ஈரோடு அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது எட்டாம் வகுப்புப் பாட நூல்களைப் பார்த்தேன். - "நான் பத்தாவதில் படித்ததை இப்போது எட்டாவதுக்கு வைத்து இருக்கிறார்கள். பிள்ளைகள் எப்படிச் சமாளிப்பார்கள்? “உங்களோடு கலந்து முடிவெடுக்கலாம் என்றால், உங்கள் நிலை சங்கடமாகிவிடும். நீங்கள் சுப்பிரமணியத்தின் நண்பர். "அவருடைய திட்டத்தை ஆதரிப்பதா, என்னுடைய முடிவை ஆதரிப்பதா என்ற சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடாது என்றே, பாடத்திட்டத்தை மாற்றுவதாக அறிவித்து விட்டு, சென்னைக்குத் திரும்பினேன்.” மேற்படி பதில் கால மாற்றத்தை மட்டுமல்லாது, ஆட்சிப் போக்கின் மாற்றத்தையும் காட்டியது. இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல், பழையபடி கல்வி வளர்ப்பிலும் பொது மக்களைக் கல்வி மேம்பாட்டில் ஈடுபடுத்துவதிலும் மூழ்கிவிட்டேன். இமாலயத் தவறு அடுத்து சில நாள்களில் நான்காம் முறையாக, இந்தியக் கல்வி அமைச்சகத்தில் இணை ஆலோசகராகச் சேரும்படி என்னை வாய்வழி அழைத்ததாகக் கல்வி அமைச்சர் என்னிடம் கூறினார். உலகியல் தெரிந்தவனாக இருந்தால், அப் புதிய சூழலில் சென்னையிலிருந்து நழுவி இந்திய அரசுப் பணிக்கு போய் இருக்கலாம். அப்பாவியாகிய நான், ஏதோ, தமிழ் மக்களைவளர்க்க வாக்குக் கொடுத்து விட்டதுபோலக் கற்பனை செய்துகொண்டு மறுத்துவிட்டேன். 'அய்யா! உங்களுக்கு முன்பிருந்தவர் காலத்திலேயே, மூன்று முறை அவர் மூலம் என்னை இந்திய அரசுக்கு அழைத்தார்கள். “ஒவ்வொரு முறையும் மறுத்து விட்டேன். இப்போது தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்புகிறேன்” என்று நான் கூறக் கேட்ட அமைச்சர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/542&oldid=788355" இலிருந்து மீள்விக்கப்பட்டது