பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 நினைவு அலைகள் நாணயம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கிய மாட்சி! மனைவியை இழந்து இருபதாண்டு காலம் தனியே வாழ்ந்தமை, கடைசிவரை பயிர்த் தொழிலைக் கவனித்தமை ஆகிய சிறப்புகள் மனக்கண் முன் நிழலாடின. தம்பி சிவானந்தம் எரியூட்டினார் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து உறவினர்களும் நண்பர்களும் வந்து துக்கம் விசாரித்தபடியே இருந்தனர். மாலைப் பொழுது வரு முன் சென்னையிலிருந்து அலுவலர்களும் அன்பர்களும் நெய்யாடிவாக்கம் வந்து சேர்ந்தனர். அதுவரை எங்கள் ஊருக்கு அத்தனை கார்கள் வந்ததில்லை என்று ஊரார் பேசியதும் காதுகளில் விழுந்தது. மூத்த உறவினர் ஒருவர் ஒரு குறும்பு செய்தார்."வடிவேலு ஜாதி கெட்டவன். ஆகவே, அவன் தந்தைக்கு எரியூட்டக்கூடாது” என்று அவர் கூறினார். அது உறவினர்களிடையே சலசலப்பு ஏற்படுத்தியது. அதை நான் விவகாரமாக்க விரும்பவில்லை! எனவே, என் உரிமையை வலியுறுத்தவில்லை. என் தம்பி சிவானந்தம் அந்த வேதனையான கடமையை மூன்றாம் நாள் சென்னைக்குத் திரும்பினேன். காமராசர் ஆறுதல் சில மணித் துளிகளுக்குள் முதலமைச்சர் என் இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறினார். அரைமணி நேரம் இருந்து என் தந்தையைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் எங்கள் வீட்டில் காபி அருந்திவிட்டு விடை பெற்றுக் கொண்டார். நெய்யாடிவாக்கத்தில் நடந்த நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/545&oldid=788358" இலிருந்து மீள்விக்கப்பட்டது