பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டானியப் பயணம் 511 சேலம் சுப்பிரமணிய முதலியாரின் மகன் டாக்டர் எஸ். பாலகிருஷ்ணன் மற்றொரு நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் ஒவ்வொரு மாலையும் என்னைக் கண்டு வெளியே அழைத்துப் போவார்கள். இரவில் இந்திய உணவு அளிப்பார்கள். அவர்கள் துணையால் ஊர் நினைவு அதிகமாகவில்லை. திட்டமிட்டபடி பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன். இந்தியா வெல்க புறப்பட இரண்டு நாள்கள் இருந்தன. அன்றும் லண்டனில் ஒரு தொடக்கப் பள்ளியைப் பார்வையிடச் சென்றேன். அப் பள்ளியில் சீனா, இந்தியாவிற்குள் ஊடுருவிய செய்தியைச் சொன்னார்கள். பள்ளிச் சிறார்கள், இந்தியா வெல்க' என்று என்னிடம் வாழ்த்துக் கூறினார்கள். நான் புன்முறுவலோடு நாளை சீனாக்காரர் ஒருவர் வந்தால், சீனா வெல்க என்றுதானே சொல்விர்கள் என்று கேட்டேன். அத்தனை பேரும் 'மா ட்டோம்” என்<TD/ ஒருமித்த குரலில் பதில் சொன்னார்கள். நான் மீண்டும் ஏன்' என்று கேட்டேன். “இந்தியா ஒரே காமன்வெல்த்தில் இருக்கிறது. எனவே, எங்கள் "நட்பு நாடு; இதனால் இந்தியா வெல்க என்று சொல்லுகிறோம்” என்று பதில் சொன்னார்கள். பெரியவர்களுடைய கருத்தோட்டம் எப்படி இருந்தது? தெம்பூட்டுவதாக இருந்தது. அப் பள்ளிக்கூட ஆசிரியர்களில் சிலர் இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் பட்டாளத்தில் பணி புரிந்தவர்கள். அப் பட்டறிவைக் கொண்டு அவர்கள் “மற்ற போர் வீரர்கள் ஆறு திங்களில் கற்றுக் கொள்வதை, இந்தியப் படை வீரர்கள் மூன்று திங்களில் கற்றுக் கொள்வார்கள் என்பதை நாங்கள் நேரில் உணர்ந்திருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/550&oldid=788364" இலிருந்து மீள்விக்கப்பட்டது