உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 நினைவு அலைகள் “இப்போது மூண்டுள்ள சீன இந்தியப் போர் தேவையற்ற தொல்லை! என்றாலும், வெற்றி இந்தியாவுக்கே” என்று தெரிவித்தனர். நாம்தான் நம் மக்களைப் பற்றித் தவறாக மதிப்பிட்டு இருக்கிறோம். சிலர் நம்மை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அப்போது உணர்ந்தேன். - 52. பாதுகாப்பு நிதி வெங்கட சுப்பிரமணியத்தின் சமயோசிதம் இலண்டனை விட்டு, சென்னைக்குப் புறப்பட வேண்டிய நாள். ஒட்டல் அறையில் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலி அடித்தது. பேச்சு வாங்கியை எடுத்துப்பேசி னேன். * “சென்னையில் இருந்து பேசுகிறேன்; கே. வெங்கட சுப்பிரமணியம் பேசுகிறேன்; சீன ஊடுருவலால் ஏர் இந்தியா பயண அட்டவணையில் எவ்வித மாறுதலும் இல்லை. தாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம், ஏற்கெனவே குறித்தபடி புறப்பட்டு வரும். “இதை ஏர் இந்தியா அலுவலகத்தில் விசாரித்துக்கொண்டு அங்கிருந்தபடியேதான் பேசுகிறேன். தங்களை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்கும் பொருட்டு முன்னதாகவே சென்னைக்கு வந்துவிட்டேன். “நலமே வந்து சேருங்கள். வீட்டில் அம்மா நலமா யிருக்கிறார்கள்” என்று திரு. வெங்கடசுப்பிரமணியம் என்னோடு பேசினார். = இந்தியாவில் நிலைமை எப்படி இருக்கிறதோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த எனக்கு, மேற்படி பேச்சு ஊக்கம் அளித்தது. “வெங்கட சுப்பிரமணியம்தான் இப்படிச் சமயோசிதமாகவும், முன் எச்சரிக்கையாவும் நடக்க முடியும்” என்று அவருக்கு நன்றி கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/551&oldid=788365" இலிருந்து மீள்விக்கப்பட்டது