உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பு நித 513 சூழ்நிலைக் கைதி காலதாமதமின்றி. உரிய நேரத்தில் இலண்டனை விட்டுப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் உரிய நேரத்தில் சென்னை வந்து அடைந்தது. விமான நிலையத்தில் பெருங்கூட்டம்: ஆசிரியர்களும் அலுவலர்களும் திரண்டு வந்து என்னை வரவேற்றனர். அது அரசு அலுவலில் உள்ள எனக்கு நல்லதல்ல. இதை உணர்ந்த நான், எவ்வளவோ இதமாக வரவேற்புகளைக் குறைக்கப் பார்த்தேன். அதில் வெற்றி பெறவில்லை. எவரைக் கொண்டு டி கல் உணவு, சீருடை வழங்கல், பள்ளிச் சீரமைப்பு, ஞானத் தந்தை திட்டம், இலவச மேற்பார்வைப் படிப்பு ஆகியவற்றை நடத்த வேண்டுமோ, அவர்களே நெடுந்தொலைவில் இருந்து வந்து கூடும்போது, அவர்களைக் கடிந்துகொள்ள முடியுமா? கடிந்து கொண்டால் அவர்கள் மனம் புண்படுமே. அப்படிப் புண்பட்டால் அவர்கள் மேற்படி பணிகளை ஆற்றாமல் நிறுத்தி விட்டால் என் செய்வது? - நான் சூழ்நிலைக் கைதியாகி, ஆங்காங்கே கொடுக்கும் வரவேற்பிற்கு ஆட்பட நேர்ந்தது. பாதுகாப்பு நிதி விமான நிலையத்திலேயே, பாதுகாப்பு நிதி அளிப்பு விழாவிற்கு நாளும் நேரமும் என்னிடம் கேட்கத் தலைப்பட்டனர். அங்கே எப்படிச் சொல்ல முடியும்? அலுவலகத்துக்கு வந்தபின் நாள்குறிப்பைப் பார்த்து, அத்தகைய விழாக்கள் பலவற்றிற்கு ஒப்புதல் அளித்தேன். ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் பாதுகாப்பு நிதி வழங்காத பள்ளிகள் இல்லை; வட்டங்கள் இல்லை. எல்லாருமே போட்டி போட்டுக் கொண்டு தாராளமாக வழங்கினர். பொது மக்களிடையே நாட்டுப்பற்று, விதைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மரம்போல பலர் மனத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறது. - நெருக்கடி ஏற்படும்போது. அது வெளிப்படுகிறது. பொங்கி வழிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/552&oldid=788366" இலிருந்து மீள்விக்கப்பட்டது