உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பு நிதி 515 “சென்னையில் தங்கள் அலுவலகத்தில் கணக்கையும், பணத்தையும் ஒப்படைத்து விட்டுத்தான் திரும்புவார்கள். “தாங்கள் ஆங்காங்கே கொடுக்கும் பணத்துக்குப் பாதுகாப்பு பொறுப்பு ஏற்கவேண்டாம். “தங்களையும், பணத்தையும் பத்திரமாகச் சென்னைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை ஆசிரியர் சமுதாயம் ஏற்றுக் ཟ། ། கொள்கிறது” என்று பதில் கூறினார்கள். சென்னைக்குத் திரும்பிய சில நாள்களுக்குப்பின் தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றேன். முதல் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடந்தது. இறுதியில் தஞ்சையில் ரயிலேறினேன். கிட்டத்தட்ட நான்கு லட்சம், பாதுகாப்பு நிதி தந்தார்கள். என்னை உற்சவ மூர்த்தி யாக்கித் திரட்டிய அவ்வளவு பணத்தையும் வாக்கு கொடுத்தபடி ஆசிரியர்களே பாதுகாத்து, காசும் குறையாமல், கணக்குச் சொல்லிச் சென்னை அலுவலகத் திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். தமிழ்நாட்டு ஆசிரியர்களின் தொண்டும், தியாகமும், நாட்டுப் பற்றும், சமுதாய உணர்வும் அந்தக் காலத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. எனவே, பிற மாவட்டங்களும் பாதுகாப்பு நிதி திரட்டுவதில் போட்டி போட்டன. இப்போதைய காமராஜர் மாவட்டத்தில் இத்தகைய பாதுகாப்பு நிதி வழங்கு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள். ஒருநாள் நிறைவு நிகழ்ச்சியாகச் சிவகாசியில் நாடார் உறவின் முறை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்டு தோறும் ஒருகோடி பாதுகாப்பு நிதி முதலமைச்சர் காமராஜர், அரசியல் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றிய அப் பெருங்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டு உரையாற்ற முடிந்தது. கூட்ட் மேடைக்குப் போவதற்குமுன் முதலமைச்சர் என்னைப் பார்த்து, “நீங்கள் பள்ளிக்கூடங்களின் வாயிலாக ஆண்டு தோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/554&oldid=788368" இலிருந்து மீள்விக்கப்பட்டது