பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515 நினைவு அலைகள் ஒரு கோடி ரூபாய் பாதுகாப்பு நிதி திரட்டலாம் என்று பேசியதாக செய்தித்தாள்களில் பெரிய எழுத்துகளில் வெளிவந்துள்ளது. "அதைப் பற்றியும் விவரமாக விளக்கிச் சொல்லுங்கள்; மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்” என்று ஆணையிட்டார். அது எப்படி முடியும் என்பதை முதலமைச்சருக்கு அப்போதே விளக்கினேன். பின்னர், பொதுக்கூட்டத்தில் அதே, செய்தியை விவரமாகக் கூறினேன். "தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் சேர்ந்து ஐம்பது லட்சம் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். m 'இப்போது காசு என்னும் நாணயம் புழக்கத்தில் இருக்கிறது. படிப்பவர் ஒவ்வொருவரும் நாளைக்கு ஒரு காசு அளிப்பது என்று சத்தியம் செய்து கொண்டால், நாள்தோறும் ஐம்பது ஆயிரம் ரூபாய் சேரும். “பள்ளிக்கூடங்கள் இருநூறு நர்ள்களுக்கு வேலை செய்கின்றன. எனவே, ஒரு கோடி ரூபாய் சேர்ந்துவிடும். “பாதுகாப்புச் செலவில் அதற்கு ஒரு கோடி ரூபாய் மிகச் சிறியது. "ஆனால், அதைக் கொடுக்கத் துாண்டும் நாட்டுப்பற்று, நாள் தோறும் புதுப்பிக்கப்படுகிறது. 'எனவே, புதிய தலைமுறை நாட்டின் பாதுகாப்பில் ஈடுபாடு உடையதாக வளரும். சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்; ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு காசாவது பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதென்று சபதம் மேற்கொள்ளுங்கள்” என்று உரையாற்றினேன். நான் உரையாற்றி முடித்ததும் முதலமைச்சர் காமராஜர், து.ாத்துக்குடி வீரபாகுவிடம், ‘எப்படி ஒரு கோடி சேர்க்க முடியும் என்று கேட்டீர்களே, இப்போது பதில் கிடைத்துவிட்டதா?” என்று வினவினார். அவரும் "ஆம்" என்று பதில் உரைத்தார். இப்போது வரலாற்று முக்கியம் வாய்ந்த நடவடிக்கை ஒன்று நினைவுக்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/555&oldid=788369" இலிருந்து மீள்விக்கப்பட்டது