பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பு நிதி 517 பெரியாரின் ஆதரவு சின ஊடுருவலால் ஏற்பட்ட நெருக்கடியின்போது பலர் பல விதமாக நடந்து கொண்டனர். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திரு. வி. கே. கிருஷ்ணமேனனைக் குறை கூறியவர் பலர். பிரதமர் நேருவையும் சேர்த்துக் குறை கூறிய தலைவர்களும் தந்தை பெரியார் எப்படி நடந்து கொண்டார்? சிறிதும் தயக்கமில்லாமல் இந்திய நாட்டையும், பிரதமர் நேருவின் ஆட்சியையும் முழு மூச்சோடு நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்தார். ‘விடுதலை’ தலையங்கங்களின் மூலமும், தமது சொற் பொழிவுகளின் மூலமும் நேருவின் கரங்களை வலுப்படுத்தினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவின் மீது போர் தொடுத்தபோது, தந்தை பெரியார் மீண்டும் இந்திய அரசுக்கு முழு ஆதரவு தந்தார். அக் கால கட்டத்தில் பெரியார் சென்னை மாநில முதல்வர் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களை ஊர் தோறும் கண்டித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், அந்நியன் போருக்கு வந்துவிட்டான் என்று தெரிந்ததும், எல்லா வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவு தந்தார். 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவின்மேல் போர் தொடுத்தது. அப்போது பெரியார் இந்திய நாட்டுக்கும் இந்தியாவின் ஆட்சிக்கும் முழு ஆதரவு தந்தார். பிரிவினைவாதி என்றும், தேசத்துரோகி என்றும், நிந்திக்கப் படும் தந்தை பெரியார் ஒவ்வொரு நெருக்கடியிலும் இந்தியாவிற்கு ஆதரவாக நடந்துகொண்டது, ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். 'வழக்காடுதல் வேறு. உயிருக்கு உலை வைக்க முயல்வது வேறு. “முந்தியது சில வேளை தேவைப்படலாம். பிந்தியது எப்போதும் குற்றம்” என்ற படிப்பினையை நாம் பெற வேண்டும். 1962ஆம் ஆண்டு சென்னையில் அனைத்திந்திய மாநாடு ஒன்று நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/556&oldid=788370" இலிருந்து மீள்விக்கப்பட்டது