பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 நினைவு அலைகள் கொட்டும் மழையில் குடியேற்றம் மாநாடு பல மாநிலங்களில் பணிபுரியும் உயர்மட்டக் கிராம சீரமைப்பு அலுவலர்களும், கல்வி அலுவலர்களும் அந்த மாநாட்டில் பங்கு கொண்டார்கள். அம்மாநாட்டை ஒட்டிக் குடியேற்றம் பகுதியில் இரண்டாவது பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டுக்கு வந்த அலுவலர்கள் அனைவரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மாநாடு அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அமைச்சரும் நானும் நடுப்பகல் வேலூரில் தங்கியிருந்தோம். மாநாட்டிற்கு இரண்டு மணி முன்னதாக மழை கொட்டு கொட்டு என்று கொட்டிற்று. இருப்பினும் நேரத்தில் குடியேற்றம் போய்ச்சேர வேண்டு மென்று மழையிலேயே புறப்பட்டு விட்டோம். குடியேற்றத்தில் கண்டதென்ன? தெருவெல்லாம் வெள்ளம்! மாநாடு நடக்க வேண்டிய பந்தலின் கீழ் ஒரடி தண்ணிர் தேங்கி நின்றது. மழையையும் பொருட்படுத்தாது ஆசிரியர்கள் அக்கம் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார்கள். அமைச்சரின் காரைக் கண்டதும் சொட்டும் பந்தலுக்குள் வந்து நிறைந்துவிட்டனர். சீருடையில் ஆசிரியர்கள் எதிர்பாராத தோற்றப் பொலிவோடு ஆசிரியர்கள் இருந்தனர். ஆசிரியர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வெள்ளை வேட்டியும் சந்தனவண்ண முழுக்கோட்டும் அணிந்திருந்தனர். இளைஞர்கள் சந்தன வண்ணத்தில் முழுக்கால் சட்டையும், முழுக்கோட்டும் அணிந்து பெருமிதத்தோடு நின்றார்கள். அதைக் கண்டு வெளி மாநில அலுவலர்கள் வியப்பிலாழ்ந்தனர். ஆசிரியைகளும் சீருடையில் வந்திருந்தனர். E. 'ஐயா, ஆசிரியர்களுக்கு ஒரு சீருடையை வகுத்துக் கொடுக்கும்படி தங்களைக் கேட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/557&oldid=788371" இலிருந்து மீள்விக்கப்பட்டது