உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண் ணாவின் பாராட்டு 519 “தாங்கள் நீங்கள் குழந்தைகள் அல்ல; அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூடி வசதிப்படி முடிவு செய்து பின்பற்றுங்கள்’ என்று பொறுப்பை எங்களிடம் விட்டுவிட்டீர்கள். 'இப்போது நாங்கள் தேர்ந்து எடுத்திருப்பது உங்களுக்குப் பிடிக்கிறதா?” என்று மூத்த ஆசிரியர்கள் என்னிடம் கேட்டார்கள். அவர்கள் தேர்ந்து எடுத்திருப்பதைப் பாராட்டினேன். எனவே, அத்தகைய சீருடை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவிற்று. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பலர் மிடுக்கான சீருடை அணிந்து, பள்ளிக்கு வந்தனர். மாணாக்கர்க்கு எடுத்துக் காட்டாக விளங்கினர். குடியேற்றம் மாநாடு திட்டமிட்டபடி நடந்தது. அமைச்சர்களும், வந்திருந்த அலுவலர்களும், ஒழுகும் மேடையில் பொறுமையாக இருந்தனர். சில ஊழியர்கள் குடைகள் பிடித்து நனைவதைக் குறைக்க முயன்றார்கள். பந்தலிலிருந்து நீர் சொட்டுவதை ஆசிரியர்களும், பொது மக்களும் பொருட்படுத்தவில்லை. தண்ணிரில் நின்றபடியே ஒன்றரை மணி நேரம் பலருடைய உரைகளையும் ஆர்வத்தோடு கேட்டனர். என்னே, அக் காலக் கண்ணியமும், கட்டுப்பாடும், தியாகமும்! 53. அறிஞர் அண்ணாவின் பாராட்டு செங்கற்பட்டு எழுத்தாளர் இரண்டாவது மாநாடு ஊரறியப் பாராட்டு 1962ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் செங்கற்பட்டு மாவட்ட எழுத்தாளர், இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டிற்கு முதுபெரும் எழுத்தாளராகிய திரு. நாரண துரைக்கண்ணன் தலைமை ஏற்றார். அம் மாநாட்டைத் தொடங்கி வைக்கும்படி என்னை உரிமையோடு அழைத்தார்கள். காரணம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/558&oldid=788372" இலிருந்து மீள்விக்கப்பட்டது