பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணாவின் பாராட்டு 525

பின்னர் அவர்களைக் கூடிப் பேச வைத்தேன். பல அ. முகளையுடைய திட்டம் ஒன்றைக் கொடுத்தார்கள். - உயர்நிலைப் பள்ளி தனியார் நிர்வாகக் கழகத்தின் சார்பில் ப/தலமைச்சரைப் பேட்டி காண ஏற்பாடு செய்தேன். + பேட்டிக்கு முன்னால் தனியாக முதலமைச்சரைக் கண்டு அவர் கட்டளையை நான் மட்டும் கோரினேன். அவர் ஒர் இரகசியத்தை என்னிடம் கூறினார். நீங் தலைமைச் செயலகத்தில் எல்லாரும் கோரிக்கைக்கு எதிராக இருக்கிறார்கள். - “நிர்வாகத்தின் சார்பில் நாளை பேட்டியில் நீங்கள்தான் வழக்காட வேண்டும்” என்று கட்டளையிட்டார். -- மறுநாள் உரிய நேரத்தில் முழு துதுக் குழுவுக்குப் பேட்டி கிடைத்தது. அவர்களில் ஒருவர் கோரிக்கைகளைப் படித்து விளக்கினார். நிதித்துறையின் சார்பில் சில தடைகள் எழுப்பப்பட்டன. பிறகு s ■ |-- 野 H == ஆக H - |முதலமைச்சர் "இயக்குநர் கருத்து என்ன?’ என்று கேட்டார். நான் அக் கோரிக்கைகளை ஆதரித்து விரிவாகவும், விளக்கமாகவும், உறுதியாகவும் உரைத்தேன். முதலமைச்சர் என்னைக் கைவிடவில்லை. என் வாதங்களை ஏற்றுக்கொண்டார். முடிவு என்ன? -- இலவசக்கல்வி நடைமுறைக்கு வரும் நாளன்று, எவர் எவர் எவ்வளவு ஊதியம் பெறுகிறாரோ, அந்த ஊதியம் அவர் அவர் பணிக் காலம் வரை பாதுகாக்கப்படும். "தனியார் பள்ளிகளுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட செலவுக்கு ஈடாக அரசின் நிதி உதவி வழங்கப்படும். - 'வைப்பு நிதிக்கு நிர்வாகம் செலுத்தும் பணமும் ஒப்புதல் பெற்று அரசின் செலவாக ஏற்றுக்கொள்ளப்படும்.” இவற்றின் அடிப்படையில் விரிவான ஆணை பிறப்பிக்கப் பட்டது. தனியார் நிர்வாக்த்தின் இடர்களும் களையப்பட்டன. - இவ் விவகாரத்தில் முதலமைச்சர் மாண்புமிகு பக்தவத்சலம் காட்டிய பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் மிகவும் போற்றுதற்கு உரியனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/564&oldid=788379" இலிருந்து மீள்விக்கப்பட்டது