பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 நினைவு அலைகள் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களின் நீண்ட பட்டறிவும், மன உறுதியும், எடுத்ததைச் சாதிக்கும் உறுதியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துணையாயின. சில புகழ்பெற்ற உயர்நிலைப் பள்ளிகள் அரச அங்கீகாரத்தை விட்டுவிட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகளாக மாறிப் பல்கலைக் கழக ஒப்புதலைப் பெறப்போவதாக ஊரறிய அறிவித்து மிரட்டின. முதலமைச்சர் அம் மிரட்டலைக் கண்டு தயங்கவில்லை. “போகிறவர்கள் போகட்டும். அதற்கு ஈடாகப் புதிய இலவச உயர்நிலைப் பள்ளிகளை உடனே தொடங்கி விடுகிறோம்” என்று பதிலறிவிப்பு விடுத்தார். மிரட்டியவர்கள் அடங்கிப் போயினர். இலவசத் திட்டத்தை ஏற்று நடத்த முன்வந்தனர் பள்ளிகளுக்கேற்பட்ட சிக்கல்கள் உயர்நிலைப் பள்ளிகள் இலவசக் கல்வி தருவதற்குமுன் மாணாக்கர்களிடம் சம்பளம் வாங்கி வந்தனர். . வாங்கும் சம்பளம் கல்வித்துறைக் கணக்கில் வரவாக எடுத்துக் கொள்வதைவிட அதிகமாக இருக்கும். அந்த மிச்சத்தைக்கொண்டு நிர்வாகம் தங்கள் நிர்வாகச் செலவை ஈடுகட்டிக் கொள்வார்கள். எல்லோருக்கும் இலவசம் என்ற பிறகு தனியார் பள்ளிகளில் 'மிச்சம்’ என்பது இராது. செலவில் நிர்வாகத்தின் பங்கை எப்படி எதிலிருந்து சமாளிப்பது - இது பெரும் சிக்கலாக எழுந்தது. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு விதித்துள்ள ஊதியத்தைவிட அதிக ஊதியம் கொடுத்து வந்தார்கள். "அவர்களுக்கு எப்படிப் பாதுகாப்புக் கொடுப்பது? 'வைப்பு நிதிக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்கை எந்த வருவாயில் இருந்து செலுத்துவது? இது எல்லாத் தனியார் பள்ளிகளையும் கலக்கிய கேள்வியாகும். is இவற்றைப் பற்றி முன்கூட்டியே சில மூத்த தலைமை யாசிரியர்களோடு கலந்து பேசியிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/563&oldid=788378" இலிருந்து மீள்விக்கப்பட்டது