உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணாவின் பாராட்டு 523 "அதைப் படிப்படியாக நிறைவேற்றச் சொன்னிர்கள். அதில் சில படிகள் கடந்து வந்துவிட்டோம். “இப்போது 100க்கு 83 பேருக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது. “பாக்கியுள்ள 17 பேருக்கும் கிடைக்கும்வரையில் தாங்கள் முதலமைச்சராகத் தொடர்ந்தால் நன்றாய் இருக்குமோ என்று தோன்றுகிறது” என்று கூறினேன். முதலமைச்சர் திரு. காமராசர் பெரும் புன்முறுவல் பூத்தார். புன்முறுவலோடு, “உங்களிடம் சொல்வதற்கு என்ன? பாக்கி உள்ளவர்களுக்கும் இலவசக் கல்விக்குத் திரு. பக்தவத்சலம் ஏற்பாடு செய்துவிடுவார். அந்த ஒப்புதல்’ பேரில்தான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கப்போகிறார். * * "நீங்கள் நல்ல பணி ஆற்றினர்கள். உங்களைப் பொதுக்கல்வி இயக்குநர் ஆக்கியபோது பள்ளிக்கூடங்கள் எல்லாம் அரசியல் களங்களாக மாறிக் கொண்டிருந்தன. “இப்போது பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை, சாதாரண ஆசிரியர்கள் அரசியல் பண்ணுவதில்லை. "நீங்கள் சொல்லி வந்ததுபோல் தங்கள் அரசியலை தங்கள் வீட்டோடும், ஒட்டுப் பெட்டியோடும் வைத்துக் கொள்ளு கிறார்கள். “மற்றவர்களை நடுநிலையாளர்கள் (நியூட்ரல்) ஆக்கியது போல் தமிழ் ஆசிரியர்களையும் மாற்ற முயற்சி செய்யுங்கள். “அதிலும் வெற்றி பெற்றுவிட்டால் தமிழ் நாட்டின் கல்விக்கு நல்ல எதிர்காலம் உறுதி” என்று முதலமைச்சர் திரு. காமராசர் ஆணையிட்டார். "அப்படியே செய்கிறேனையா” என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன். அடுத்த நாள் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சர் பதவி ஏற்றார். அவர் எதிர்பார்த்தபடி, ‘எல்லோருக்கும் இலவசக்கல்வி' திட்டத்தை முழுமைப்படுத்தினார். 1964ஆம் ஆண்டு ஜூன் திங்கள்முதல், தமிழ் நாட்டில் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்க ஆணை பிறப்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/562&oldid=788377" இலிருந்து மீள்விக்கப்பட்டது