பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 நினைவு அலைகள் இருப்பினும் காமராசர் முன்வைத்த காலைப் பின் வைக்கவில்லை. ஏற்கெனவே முடிவு செய்தபடியே செயல்பட்டார். நன்மை, பிறந்தது அந்த நடவடிக்கை அனைத்திந்தியாவிற்கும் பெரும் நன்மையாக உருவெடுத்தது! பிரதமர் நேரு மறைந்தபோதும், பிரதமர் லால்பகதுர் சாஸ்திரி மறைந்தபோதும் ஏற்பட இருந்த நெருக்கடிகளை அனைத்திந்திய காங்கிரசின் தவைரான காமராசர் எளிதில் தீர்த்துவைத்தார். அவ்விரு நெருக்கடிகளிலும் காமராசர் ஆற்றிய அருந் தொண்டு வரலாற்றுப் பெரும் புகழ் பெற்றதாகும். மாநிலத் தலைவராக விளங்கிய காமராசரை அனைத்திந்தியத் தலைவராக உயர்த்தியதோடு பன்னாடுகளும் போற்றும் இந்திய அரசியல் ஞானியாக உயர்த்திற்று. * காமராசருக்கு நன்றி மாண்புமிகு காமராசர் முதலமைச்சர் பதவி துறப்பதற்கு முன்னால், நான் அவரை அவரது இல்லத்தில் கண்டேன். அவரைக் கண்டதும் என் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. தமுதமுத்த குரலில், "தங்களிடம் ஒன்பது ஆண்டு காலம் பொதுக்கல்வி இயக்குநராகப் பணியாற்றினேன். எனக்கு அப் பதவியைக் கொடுத்தது தாங்கள்தான். “பதவியைக் கொடுத்ததோடு முழுஉரிமையையும் கொடுத்து வந்தீர்கள். “ஒருமுறைகூட எனது நிர்வாகத்தில் தாங்கள் தலையிட்டதில்லை. "தங்கள் முழு ஆதரவு இருந்ததால்தான் இருபது லட்சம் பேர் படித்த தமிழ்நாட்டில் அய்ம்பது லட்சம் பேருக்குமேல் படிக்கும் நிலையை உருவாக்க முடிந்தது. T. "இவற்றிற்கெல்லாம் எப்படித் தங்களுக்கு நன்றி சொல்வது என்று தெரியாது திகைக்கிறேன். “ஆனால், ஒரே ஒரு சிறு குறையும் உறுத்துகிறது. சாதி பாராமல், வருமானம் எவ்வளவு என்று கேட்காமல், எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யும்படி கட்டளை இட்டீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/561&oldid=788376" இலிருந்து மீள்விக்கப்பட்டது