பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணாவின் பாராட்டு 521 அறிஞர் அண்ணா பாராட்டியதோடு நிற்கவில்லை. கட்டளை ஒன்றும் இட்டார். ஓய்வு பெற்றபின் இலக்கியப் பணி "திரு. நெ. து. சு. ஒய்வு பெற்ற பிறகு இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதில் முழுக் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.” -- மேலும் பேசுகையில் “நல்ல வரலாற்று நூல்கள் எழுதும்படி ஆலோசனை கூறினார். ஒரளவு அறிஞர் அண்ணா இட்ட பணியை நான் ஆற்றி வருகிறேன். அதுவே எனது வாழ்க்கையின் ஒரே உந்து ஆற்றலாக விளங்குகிறது. = காமராசர் திட்டம் அடுத்துக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி 1963 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அது வரலாற்றுத் திருப்பம் உடையதாக உருவெடுத்தது. அது என்ன? ‘அனைத்திந்திய காங்கிரசின் தேசத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகி, முழுநேரக் கட்சிப் பணிக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்ளவேண்டும்’ என்று அப்போதைய முதலமைச்சர் திரு. கே. காமராசர் ஒரு யோசனையைச் சொன்னார். அது காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத் திட்டத்தைக் காமராசர் திட்டம்’ என்று அழைப்பர் அதையொட்டிக் காமராசர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். தந்தை பெரியார் மேற்படி முடிவைக் கண்டு பதறிப் போனார். பெரியாரின் பதற்றம் காமராசருக்கு நீண்ட தந்தியொன்று அனுப்பினார். அதில், "தங்கள் விருப்பப்படியோ அல்லது பிறர் துரண்டுதலின் பேரிலோ முதலமைச்சர் பதவியைவிட்டு விலகிவிட முடிவு செய்திருப்பது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் தங்களுக்கும் அரசியல் தற்கொல்ைக்கு ஒப்பாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/560&oldid=788375" இலிருந்து மீள்விக்கப்பட்டது