பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அமெரிக்கப் பயணம் 527 'ஆம் நடு ராத்தியில் இருமுறை அப்படிப்பட்ட உணர்வு ஏற்படத் துாக்கம் கலைந்தது. கட்டிடம் ஆடுகிறதோ என்று அஞ்சினேன்” என்று பதில் கூறினேன். ‘வானவூர்தியில் நெடுந்துாரம் ஒய்வின்றிப் பயணம் செய்வோருக்கு அப்படி ஒரு மயக்கம் ஏற்படும். “அடுத்த நாள் எல்லாம் சரியாகி விடும். எனவே அஞ்சவேண்டாம்” என்று விளக்கம் கூறினார். காலைச் சிற்றுண்டிக்குப்பின் என் பயணத்திட்டத்தை வகுத்துக் கொடுக்க வேண்டிய அமெரிக்கரை அவரது அலுவலகத்தில் கண்டேன். அவர் என்னோடு கலந்து பேசி இரு திங்களுக்கான கல்விப் பயணத் திட்டத்தை உருவாக்கினார். அவரைப் பார்க்கப் போகும்முன் நடந்த ஒர் உரையாடல் என் நினைவுக்கு வருகிறது. வாடகைக் கார் என்னை ஏற்றிக்கொண்டு பயணத்திட்ட அலுவலகம் சென்று கொண்டிருந்தது. காரோட்டி, நான் எந்த நாட்டிலிருந்து வருகிறேன்’ என்று கேட்டார். இந்தியாவிலிருந் து வருவதாகப் பதில் கூறினேன். காரோட்டியின் நினைப்பு, மனிதருள் மாணிக்கமான நம் ஜவகர்லால் நேருவின்மேல் சென்றது. அந்தக் கருப்பு அமெரிக்கர், "உங்கள் நேருவும் எங்கள் கென்னடியும் -- கட்சித் தலைவர்களாக இருந்தது உண்மையே. “ஆனால், கட்சித் தலைவர்கள் என்பது பாதி உண்மையே! முழு உண்மை என்ன? 'இவ் விருவரும் மனித குலம் முழுமைக்கும் சொந்த மானவர்கள். மனித இனத்தலைவர்கள்” என்று கூறினார். அப்போது உணர்ச்சி வயப்பட்டார். அவரது மதிப்பீடு என்னைப் புல்லரிக்கச் செய்தது. அமெரிக்கர் கல்வி முறை எனது சுற்றுப் பயணத்தில் பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் ஆகியவற்றைப் பார்க்க ஏற்பாடு செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/566&oldid=788381" இலிருந்து மீள்விக்கப்பட்டது