பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 நினைவு அலைகள் வெளி நாட்டவர் காண வேண்டிய காட்சியகங்களைக் கண்டு வர ஏற்பாடு செய்தார்கள். எனவே, அதிபர் லிங்கன் நினைவாலயம், அரும்பொருள் காட்சியகம், நயாகரா அருவி, சுதந்திரதேவி சிலை போன்றவற்றைக் கான வாய்ப்பு ஏற்பட்டது. வாஷிங்டன், நியூயார்க், நியூஏவன், அட்லாண்டா, சிகாகோ ஆகிய பல நகரங்களைக் கண்டு அறிந்தேன். என்னுடைய முதல் அமெரிக்கப் பயணம் கற்பித்த பாடங்கள் சிலவாகும். அவற்றுள் முதலாவது, "அமெரிக்கக் கல்வி முறை” என்று நாடு தழுவிய ஒரே கல்வி முறை இல்லை என்பதாம். அப் பெரிய நாடு இரண்டாயிரத்து நூறு கல்வி மாவட்டங் களையுடையது. மாவட்டத்தோறும் கல்வித் திட்டம் வகுத்து நடைமுறைப் படுத்துகிறார்கள். ■ மாவட்டத்திற்கு மாவட்டம் பாடத் திட்டத்தில் சிற்சில வேறுபாடுகள் இடம் பெறுவதுண்டு. ஒவ்வொரு மாநிலமும் (இராச்சியம்) கல்விக்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுகிறது. பொறுப்பு மாநில அரசிடம் இருந்தாலும், மாவட்டங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கல்வித் திட்டங்களை மாநிலங்கள் அனுமதிக்கின்றன. அமெரிக்க மைய அரசு பொதுக் கல்விக்கு நேரடியான பொறுப்பு ஏற்கவில்லை. கல்வி நிலையங்களில் ஒன்றுக்கொன்று தர வேறுபாடு காணலாம். மாணவர்களின் பின்னணியும் சூழலும் இருந்தாலும், கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது. இவை இரண்டும் மட்டமாக இருந்தால், கல்வியின் தரம் குறைந்து இருக்கக் கண்டேன். நிற வேறுபாடு sa அமெரிக்கக் கல்வி ஏற்பாட்டில், தலை வேதனையாக இருப்பது ஒன்றுண்டு. அது என்ன? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/567&oldid=788382" இலிருந்து மீள்விக்கப்பட்டது