பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 நினைவு அலைகள் அதை நினைவில் வைத்துக் கொண்டிருந்தேன். வாஷிங்டனில் பயணத் திட்டம் போடும்போது குறிப்பிட்டேன். எனவே, நியூஏவன் கல்லூரியை நான் பார்வையிடல் இடம் பெற்றது. --- ஒருநாள் மாலைபொழுது சாயும் நேரத்தில் பேருந்தில் நியூஏவன் சென்று அடைந்தேன். பயண அலுப்பே தோன்றவில்லை. சாலைகள் மேடு பள்ளங்கள் இல்லை. பேருந்து வண்டியும் அலுக்காமல் குலுக்காமல் பறந்து சென்றது. எனவேதான் அலுப்புத் தட்டவில்லை. பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அகார்டியே எனக்காகக் காத்திருந்தார். அன்போடு என்னை வரவேற்றார். நெடுநாள் பழகிய நட்புணர்வோடு என்னைத் தமது இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவ் வில்லம் வசதியான திறந்தவெளியுடைய மாடிக் கட்டடம் உள்ளே நுழைந்ததும் கண்ட்தென்ன? அண்ணல் காந்தியாரின் முழுத் திருஉருவப் படமாகும். பல மணித்துளிகள் இதைப் பார்த்தபடியே மெய் மயந்து நின்றுவிட்டேன். பேராசிரியர் சில மணித்துளிகளுக்குப் பிறகு என் தோளில் கையை வைத்து எனக்கு நினைவு வரச் செய்தார். எனக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத் துச் சென்றார். அன்றிரவும் மறுநாள் இரவும் அவர் இல்லத்தில் தங்கியிருந்தேன். அருமையான விருந்தோம்பல். சுவையான தாவர உணவு மறுநாள் பேராசிரியர் என்னைப் பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். பிறநாட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் நம்மைவிட அதிகமாக நூலகங்களைப் பயன்படுத்துகிறார்கள். வெவ்வேறு துறைகளுக்காக வெளியிடப்படும் பருவ இதழ்களைப் படித்து நேற்றுவரை நடந்ததைத் தெரிந்து கொள்ளுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/571&oldid=788387" இலிருந்து மீள்விக்கப்பட்டது