உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு விரைந்தேன். 53.3 பாய்ந்து ஒடும் ஆறாக இல்லாவிட்டாலும் தெளிந்தோடும் சிற்றோடைகளாகவாகிலும் பிற நாட்டுக் கல்வியாளர்கள் விளங்கினார்கள். கலந்துரையாடல் நியூஏவன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர்களோடு கலந்து உரையாட நேரம் ஒதுக்கியிருந்தார்கள். - == -- அப்போது இந்திய அரசியல் சட்டம் காட்டும் கல்வி நெறிக் கொள்கை, அதைப் பின்பற்றி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விவரித்தேன். தமிழ்நாட்டில் வீறுநடைபோட்டுவந்த இலவசப் பகலுணவு, இலவசச் சீருடை, பள்ளிச் சீரமைப்பு, மேற்பார்வை படிப்பு முதலியனவற்றைப் படம் பிடித்துக் காட்டினேன். நம்மை நாமே உயர்த்திக் கொள்ளப் பரவலாக எடுத்துள்ள மேற்படி முயற்சிகளை அவர்கள் போற்றினர். 55. சென்னைக்கு விரைந்தேன் அதிர்ச்சி ஊட்டும் செய்தி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போதும் சென்னையில் உள்ள பொதுக்கல்வி இயக்ககத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்தேன். இயக்ககத்திற்கு வழிகாட்டும் குறிப்புகள், ஆணைகள் முதலியன அனுப்பி வந்தேன். இயக்ககத்தில் இருந்து அரசு ஆணை, அரசு ஆலோசனைகள் ஆகியவைகள் பற்றி அடிக்கடி சிறு குறிப்புகள் வரும். மதுரையில் ஒர் அரசினர் மகளிர் கல்லூரியும், அரியலூரில் ஒர் அரசினர் ஆண்கள் கல்லூரியும் தொடங்குவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவைக் கோரி, விண்ணப்பம் அனுப்பி' விட்டு அமெரிக்கா சென்றிருந்தேன். அவ் விரண்டிற்கும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அமெரிக்காவில் இருந்தபடியே தூண்டி வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/572&oldid=788388" இலிருந்து மீள்விக்கப்பட்டது