பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 நினைவு அலைகள் அரசு கல்லூரி தொடங்கப் பொதுமக்களிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் திரட்ட வேண்டும் என்பது அரசின் ஆணை அரியலூரைப் பொறுத்தவரையில் சற்றுச் சுண்க்கம் ஏற்பட்டது. அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியாளராக இருந்த திரு. கே. சொக்கலிங்கம் முன் வந்து ஊக்குவித்தார் மேற்படி கல்லூரிகள் இரண்டும் திட்டமிட்டபடி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தைந்தில் ஜூன் திங்களில் தொடங்கப்பட்டன. தாய் நாட்டோடு தொடர்பு வைத்து இருந்ததால் அதிர்ச்சி ஊட்டும் செய்தி ஒன்று உடனுக்கு உடன் எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னை மாநிலத்தில் கடுமையான உணவு பற்றாக்குறை. நகரங்களில் எல்லாம் பங்கீட்டுமுறை நடைமுறைக்கு வந்துவிட்டது. சென்னைக்குத் திரும்பினேன் சென்னை மாநகரில் நடந்து வந்த தனியார் பள்ளிகள் பல, நடத்தி வந்த பகல் உணவுத் திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசுக்கு முன்னறிவிப்புக் கொடுத்திருந்தன. இந்தச் செய்தியை வாஷிங்டனில் தெரிந்து கொண்டபோது என் நெஞ்சம் பதறிற்று. எவ்வளவோ யோசித்துத் திட்டமிட்டுத் தொடங்கிய பகல் உணவு ஒரு நகரத்தில் நின்றால், மற்ற நகரங்களில் உள்ள பள்ளிகளும் அப்படியே செய்துவிட்டால், இயக்கத்திற்குப் பெருங்கேடு விளையுமே என்று அஞ்சினேன். அந்த அச்சம் ஏற்பட்டதும் நொடியில் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று துடித்தேன். எனது அமெரிக்கப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டேன். “சுந்தரவடிவேலு பேசுகிறேன். நான் அலுவல் காரணமாக அடுத்த விமானத்தில் சென்னைக்குத் திரும்ப விரும்புகிறேன். தயவுசெய்து அதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். “குறிப்பிட்ட எட்டு வாரங்களில் ஆறு வாரங்கள் சுற்றுப்பயணம் செய்துவிட்டேன். மேற்கொண்டு இரு வாரங்கள் உங்கள் கல்வி நிலையங்களைப் பாராமல் தாய்நாடு திரும்புவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/573&oldid=788389" இலிருந்து மீள்விக்கப்பட்டது