பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு விரைந்தேன் 535 “தயவுசெய்து அடுத்த விமானத்தில் இந்தியாவிற்குச் செல்ல வற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். முதலில் நான் தனிப்பட்ட காரணங்களுக்காக ஊர் திரும்ப விழைவதாக எண்ணினர் போலும். “என்ன செளகரியக் குறைவு? என்னிடம் மனம் விட்டுச் சொல்லுங்கள். அதைப் போக்க முடியுமானால், ஆவன செய்கிறேன்! “பாக்கியுள்ள இரண்டு வாரங்களும் இந் நாட்டில் இருந்து விட்டுப் போகலாம். "நீங்கள் இனிப் பார்க்க வேண்டிய மேற்குப் பகுதி அமெரிக்கா, காட்சிக்கு இனியது. அதைப் பார்க்கத் தவறக்கூடாது” என்று என்னோடு வாதாடினார். ங்கி நான் சென்றால் பத்துப் பதினைந்து ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யக்கூடும் போகாவிட்டால் அது நின்று போகலாம். அப்புறம் தொடங்குவது எளிதல்ல. நான் திரும்பிப்போக விரும்புவது பொதுநலனைக் கருதியே” என்று இரண்டாம் முறை தெளிவுபடுத்தியபோது, அவரும் நான் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய ஒப்புக் கொண்டார். ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன. அமெரிக்க அழைப்பில் ஒரு வழிப் பயணம். அமெரிக்கா விமானத்தில் செல்ல வேண்டும் என்று கண்டிருந்தது. அதன்படி செல்வது என்றால் ஒருநாள் தாமதம் ஏற்படும். எனவே, எனக்கு உதவ வேண்டும் என்பதற்காக அந்த நிபந்தனையை நொடியில் தளர்த்தினார்கள். அன்றே புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் எனக்கு இடம் வாங்கித் தந்தார்கள். திடுதிப்பெனச் சில மணிநேர அறிவிப்பில் சென்னைக்குத் திரும்பினேன். அமெரிக்கப் பயணம் வேறு இடையூறு இன்றி நடந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பும் பயணமும் அப்படியே இடையூறோ தாமதமோ இல்லாமல் நடந்தது. உரிய நேரத்தில் சென்னை மீனம்பாக்கம் வந்து சேர்ந்தேன். அமெரிக்காவில் இருந்து புறப்படுவதற்குமுன் எனது அலுவல்கத்திற்கு விரைவுத் தந்தி அனுப்பியிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/574&oldid=788390" இலிருந்து மீள்விக்கப்பட்டது