பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

535 ■ நினைவு அலைகள்' எனவே, எனது அலுவலகத் தோழர்கள் விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றார்கள். - + என் மனைவியைக் காணாதபோது உடம்பிற்கு என்னவோ என்று கவலைப்பட்டேன். 'உடம்பிற்கு ஒன்றுமில்லை. தமது கல்லூரிச் சிநேகிதி திருமதி பகவத்குட்டி அம்மாளோடு சிலநாள் இருந்துவிட்டுவரப்போபால் சென்றிருக்கிறார்’ என்று கேள்விப்பட்டுக் கவலையைவிட்டேன். திருமதி.பகவத்குட்டியின் குடும்பமும், எங்கள் குடும்பமும் நெருங்கிப் பழகியவை. அந்த அம்மாளின் கணவர் திரு. டி. சி. ஆர். மேனன் மத்தியப் பிரதேச அரசின் செயலாளர்களில் ஒருவர். முதல்வரைச் சந்தித்தேன் நான் சென்னை திரும்பியதும் காலதாமதமின்றி, முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களைப் போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவர் வியப்பில் ஆழ்ந்தார். "நீங்கள் இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் கழித்துத்தான் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். திடீரென்று முன்னதாகவே வந்துவிட்டீர்கள் உடம்புக்கு ஒன்றுமில்லையே?’ என்று வியப்போடும், பரிவோடும் கேட்டார். "உடம்புக்கு ஒன்றுமில்லை; சென்னை மாநகரில் தனியார் பள்ளிகள் அரிசி பற்றாக்குறை காரணமாக, பகல் உணவு போடுவதைத் தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவிப்பு கொடுத்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அப்புறம் இருக்க மனம் கொள்ளவில்லை. == "இதற்கு ஏதாவது பரிகாரம் காணலாமா?” என்று தங்களைக் கேட்கப் பறந்தோடி வந்துவிட்டேன். “நிறுத்தத்தை, நிறுத்தியாக வேண்டும். தங்கள் ஆணைப்படி நடந்து கொள்கிறோம்” என்று நான் முதலமைச்சரிடம் கூறினேன். உங்கள் ஆலோசனை என்ன? அவர், “நீங்கள் ஏதாவது ஒரு யோசனையோடுதானே வந்திருப்பீர்கள்? என்ன செய்யலாம்? சொல்லுங்களேன்” என்று முதலமைச்சர் என்னைக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/575&oldid=788391" இலிருந்து மீள்விக்கப்பட்டது