உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== சென்னைக்கு விரைந்தேன் 537 "ஐயா, ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு பேருக்குப் பகல் உணவு போடலாம் என்பதை ஒவ்வொரு காலாண்டும் தொடங்குவதற்கு முன், பள்ளி ஆய்வாளர் எழுத்து மூலம் அறிவித்து விடுகிறார். "இந்தக் காலாண்டுக்குச் செப்டம்பர் திங்களுக்குள் அறிவித்திருப்பார். "அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டாம் என்று சென்னைப் பெருநகர் ஆய்வாளர்களுக்கு ஆணை பிறப்பித்து விடலாம். “ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட எண்ணிக்கையின் பேரில் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் அரிசியின் அளவைக் கணக்கிடலாம். “அந்த அளவுக்கு அரிசி வாங்கிக் கொள்ளும்படி மாதத்திற்கு ஒரு 'பெர்மிட்' கொடுக்க ஆணை பிறப்பியுங்கள். பள்ளிகளுக்கு எவ்விதத் தொல்லையும் இருக்காது. “தாங்கள் ஆணையிட்டால், சென்னைத் தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்துப் பேசுகிறேன்” என்று முதலமைச்சரிடம் கூறினேன். உடனடி முடிவு முதலமைச்சர் பக்தவத்சலம் அவருக்கே உரிய தனித்தன்மை யோடு இமைப்பொழுதில் முடிவு எடுத்தார்; செயல்பட்டார். சென்னை மாவட்ட ஆட்சியாளர் செல்வி சத்யபாமாவோடு தொலைபேசியில் பேசினார். அவருக்கு வழிகாட்டினார். “பொதுக்கல்வி இயக்குநர் நெ.து. சு. என் முன்னே இருக்கிறார். 'பகல் உணவு போடும் தனியார் பள்ளிகள் வாரந்தோறும் பங்கீட்டுக் கடைகள் முன் நீண்டவரிசையில் நின்று அரிசி பங்கீடு பெறுவது ஆகிற காரியம் அல்ல. அதில் உள்ள துன்பத்திற்கு அஞ்சி, தனியார் பள்ளிகள் பகல் உணவை நிறுத்தி வைக்கப் போவதாக முன் அறிவிப்பு கொடுத்துள்ளன. "அப்படி நடக்காமல் இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும். “ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை பேர்களுக்கு உணவு அளிப்பது என்று ஆய்வாளர்கள் முன்னதாகவே அறிவித்து உள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/576&oldid=788392" இலிருந்து மீள்விக்கப்பட்டது