பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 நினைவு அலைகள் "அந்தக் கணக்குப்படி மாதம் ஒருமுறை வேண்டிய அரிசியை மொத்தமாக வாங்கிக் கொள்ள அவர்களுக்கு மொத்த பெர்மிட்' கொடுத்துவிடலாம் அல்லவா! அப்படிச் செய்வதற்கு என்ன பாதுகாப்பு தேவையோ, அதை இயக்குநரோடு பேசி முடிவு செய்யுங்கள்” என்று முதல்வர் கூறவும், அம்மையார், “இந்தப் பாதுகாப்பு போதும்” என்று பதில் உரைத்தார். ஆட்சியாளர் விரும்பியபடி நானே எல்லாப் பள்ளிகளுக்கும் உரிய தகவல்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியாளருக்கு அனுப்பிவிட்டேன். அதன்படி மொத்த பெர்மிட் கிடைத்தது. சென்னைப் பள்ளிக்கூடங்கள் பகல் உணவை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தின. உரியவர்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை நேரா நேரத்தில் சொன்னால், மலையளவு தடைகள் குறுக்கிட்டாலும், அவற்றைப் பெரியோர்கள் எளிதில் நீக்கிவிடக்கூடும் என்பது தெளிவு ஆயிற்று. முதலமைச்சர் பள்ளிகளுக்குப் பங்கீட்டு அரிசி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு, என்னிடம் வேறு ஒரு செய்தியைக் கூறினார். பிரதமர் சாஸ்திரியின் அழைப்பு “நான் சிலநாள்களுக்கு முன் புதுதில்லிக்குச் சென்றிருந்தேன். அப்போது பிரதமர் சாஸ்திரியைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்து, “உங்கள் கல்வி இயக்குநரை எவ்வளவு காலத்திற்குத் தமிழ்நாட்டோடு வைத்திருக்கப் போகிறீர்கள்? அவர் இந்திய நாடு முழுவதற்கும் பயன்பட வேண்டாமா? இனியாவது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பி வையுங்கள்” என்றார். “நீங்கள் அமெரிக்கா சென்றிருக்கிறீர்கள். அங்கிருந்து திரும்பியதும், உங்களைக் கலந்துகொண்டு பதில் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். உங்கள் விருப்பம் என்ன?” என்று முதலமைச்சர் என்னைக் கேட்டார். மனம் திறந்து பேசினேன் “ஐயா, ஏற்கெனவே சிலமுறை இந்திய அரசு என்னை அழைத்தது உங்களுக்கே தெரியும். பெரிய வல்லுநராவதற்குப் பதில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/577&oldid=788393" இலிருந்து மீள்விக்கப்பட்டது