பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு விரைந்தேன் 539 பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்பட வேண்டும் என்பதே எனது = giya)JIT. “இந்திய, அரசில் சேர்ந்தால், இங்கும் அங்கும் பெரிய மகாநாடுகளுக்குச் சென்று வரலாம். நான் பெரியவனாக வளரலாம். “தில்லியில் இருந்தால் இந்தி கற்றுக் கொள்ளாத நான் பொதுமக்களுக்கு நேரடியாகப் பயன்படும் வாய்ப்பு அரிதாகவே இருக்கும். இதனால்தான் முன்னரே தில்லிப் பதவியை மறுத்து வந்துள்ளேன். “இப்போதும் அதேநிலைதான். ஆனால் ஒன்று முப்பத்தைந்து ஆண்டுகளாக என்னை நன்றாக அறிந்தவர்கள் என்பதால், என்னைத் தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்பி மனம் விட்டுப் பேசுகிறேன், தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். “என்னால், தங்களுக்கோ, அரசுக்கோ ஏதாவது இடையூறு ஏற்படும்போல் தோன்றினால் தயவுசெய்து தயங்காமல் அதை என்னிடம் கூறுங்கள் யாருக்கும் சங்கடம் விளைவிக்காமல் நானே ஒய்வுபெற்றுக் கொள்கிறேன். "உடம்பில் வலு இருக்கும்போதே அப்படி ஒய்வு பெற்றால் நான் வீணாகிவிடமாட்டேன். ஏதாவது சமுதாயத் தொண்டாற்றப் பயன்படுவேன்” என்று முதலமைச்சரிடம் கூறினேன். முதல்வரின் முடிவு "நீங்கள் தில்லிக்கு வரவிரும்பவில்லை என்று பதில் சொல்லிவிடுகிறேன். “நீங்கள் முன்கூட்டியே ஒய்வுபெற வேண்டிய நிலை எப்போதும் ஏற்படாது. "நீங்கள் கசப்பை வளர்த்துக்கொள்ளத் தேவையில்லை. எப்போதும்போல் ஆர்வத்தோடு பணியாற்றுங்கள்” என்று முதலமைச்சர் கட்டளையிட்டு அனுப்பினார். அப்படியே செய்து வந்தேன். மதுரைப் பல்கலைக் கழகக் குழு இதற்கு இடையில் சென்னை மாநில அரசு மதுரையில் புதிய பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்க விரும்பியது. அதற்காக ஒரு குழுவை நியமித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/578&oldid=788394" இலிருந்து மீள்விக்கப்பட்டது