பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி - 1965 543 "இவ்வளவு நிலத்தையும் இப்போது பல்கலைக் கழகத்துக்கு ஒதுக்கவில்லை என்றால் இரண்டொரு ஆண்டுகளில் வளாகத் தினூடே பற்பல குடிசைகளும், சிறுவீடுகளும் எழும்பிவிடும். பல்கலைக் கழகம் குடிசைப் பகுதியாக மாறிவிடும்” என்று விளக்கினேன். முதலமைச்சர் முடிவு கூறினார். “புதிய பல்கலைக் கழகம் தொடங்குவதைத் தள்ளிப்போட வேண்டாம்” என்றார். 'இடத்தைப் பொறுத்தவரையில் வல்லுநர் குழுவின் பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்” என்று கட்டளையிட்டார். அரசு ஆணை அப்படியே வந்தது. 1966ஆம் ஆண்டு மதுரை தல்லாகுளத்தில் தற்காலிகக் கட்டிடத்தில் மதுரைப் பல்கலைக் கழகம் இயங்கத் தொடங்கியது. பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அப் பல்கலைக் கழகத்தை மாண்புமிகு பக்தவத்சலம் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் நானும் கலந்துகொண்டு உரையாற்ற வேண்டுமென்று முதலமைச்சர் விரும்புவதாகக் கல்விச் செயலர் எனக்கு நேர்முகக் கடிதம் எழுதினார். பின்னர் முதலமைச்சரே அதை என்னிடம் கூறினார். அக் கட்டளைப்படி நானும் அவ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். நிற்க, 65 - இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி 1964ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையில் சூறாவளி ஒன்று கிளம்பிற்று. அது எதிலிருந்து கிளம்பிற்று? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1965 ஜனவரி 26 ஆம் நாள் முதல் இந்தி மட்டுமே மைய அரசின் ஆட்சிமொழியாக இருக்கும்’ என்ற விதியைச் சேர்ந்திருந்தார்கள். அந்த நாள் நெருங்குகையில், “இந்தி தனி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். இந்தி பேசாத மக்களைக் கொண்ட மாநிலங்கள் விரும்பும்வரை, ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு முழுவதிலும் இந்தி எதிர்ப்புக்குரல் எழும்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/582&oldid=788399" இலிருந்து மீள்விக்கப்பட்டது