பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 நினைவு அலைகள் என்மீது குற்றச்சாட்டு! அதில் கடுமையான வாதம் நடந்தது. வாதத்தில் கலந்து கொண்ட திரு. கோசல்ராம், ஆட்சியின்மேல் சில குற்றச் சாட்டுகளைச் சொல்லிவிட்டு, பொதுக்கல்வி இயக்குநராகிய என் பேரிலும் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். அது என்ன? 'திராவிட முன்னேற்றக் கழகத்தார் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு நாள் அறிவித்ததிலிருந்து, பொதுக்கல்வி இயக்குநர் இந்திக்கு ஆதரவாக ஒருசொல்கூடச் சொல்லவில்லை. "அந்த மெளனம் ஏன் என்பது விளங்கவில்லை. அவரும் உடந்தையா? என்று கேட்க விரும்புகிறேன்." பல குற்றச்சாட்டுகளுக்கும், கருத்துகளுக்கும், பதில் கூறியும் மாண்புமிகு பக்தவத்சலம் என்னைப் பற்றிய குற்றச்சாட்டுக்கு ஏதும் பதில் சொல்லவில்லை. மாறாக, கிளர்ச்சிக்கு “யார் யார் உடந்தை? எவர் எவர் உடந்தையில்லை? என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படி உடந்தையாயிருந்தவர்களை என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்பதும் எனக்குத் தெரியும். அதை என்னிடம் விட்டு விடுங்கள்” என்று இருபொருள் படும்படி முதலமைச்சர் பக்தவத்சலம் பேசிச் சமாளித்துவிட்டார். இரவோடு இரவாக, அக்கூட்டத்தில் என் பேரில் குற்றம் சாட்டப்பட்டதும் முதலமைச்சர் பதிலும் பற்றிய செய்தி, திருச்சியிலிருந்த தந்தை பெரியார் காதுக்கு எட்டியது. பெரியார் வீரமணியை அனுப்பினார் பெரியார் பதறிப் போனார். செய்தி கேட்டவுடன் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடன் பேசி அவரை மறுநாள்காலை என்னிடம் அனுப்பினார். அவர் என்னை வந்து கண்டு. விரிவாக உரையாடினார். ஏதாவது என்னை அறியாமலும் பிழை ஏற்பட்டிருந்தால் பெரியார் தலையிட்டு ஆவன செய்வதாக அவர் சொல்லி அனுப்பியதையும் என்னிடம் கூறினார். என். எம். ஆர் சுப்பராமன் முதலமைச்சரிடம் என்னைத் துது அனுப்பிய செய்தி முதற்கொண்டு, அவ்வப்போது நான் கேட்ட செய்திகளை முதலமைச்சரிடம் கூறி வந்ததையும் முதலமைச்சரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/591&oldid=788409" இலிருந்து மீள்விக்கப்பட்டது