பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்மீது குற்றச்சாட்டு-பெரியாரின் கவலை 553 ஆணைப்படிதான் நான் மெளனமாய் இருந்ததையும் எடுத்து உரைத்தேன். "முதலமைச்சருக்கே இவ்வளவும் தெரிந்து இருப்பதாலும் நீங்கள் மும்மொழித் திட்டத்தை வெளிப்படையாக ஆதரித்து வந்ததைப் பல தரப்பினர்களும் அறிவார்கள். ஆதலாலும், கோசல்ராம் எழுப்பிய சலசலப்புக்கு ஆதாரமில்லை” என்று கூறிவிட்டு திரு. வீரமணி விடைபெற்றுக் கொண்டார். நான் சொன்னதை எல்லாம் விரிவாகவும், விவரமாகவும் பெரியாருக்கு தெரிவித்துவிட்டார். பெரியாரும் நிம்மதியாக இருந்தார். சட்டமன்றத்தில் குற்றச்சாட்டு 1965 மார்ச் 6ஆம் நாள் சென்னை சட்டமன்றப் பேரவையில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு பற்றிய கோரிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்தகைய் விவாதங்களின் போது சம்பந்தப்பட்ட பெரிய அலுவலர்கள், மன்றத்தில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள, இடத்தில் இருக்க வேண்டும். எனவே, நான் அங்கு இருந்தேன். பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ப்லர் பேசினர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த திரு. கே. டி. கோசல்ராம் பேசும்போது “பொதுக்கல்வி இயக்குநர் அதற்கு முன்பெல்லாம் இந்தியை ஆதரித்துப் பேசி வந்தார். இந்தி எதிரிப்புக் கிளர்ச்சிக்கு நாள் குறிப்பிட்டது. முதல் அவர் எங்கும் அதைப் பற்றிப் பேசவே இல்லை. அந்த மெளனம் ஐயப்பாட்டைக் கிளருகிறது. அவர் இந்தி எதிர்ப்பு அனுதாபியா?” என்று என் மீது சேற்றை வாரியிறைத்தார். கலைஞர் என்னைத் தாக்கினார் எதிர்க்கட்சியின் சார்பில், கல்விக் கோரிக்கையின் மேல் திரு. கலைஞர் மு. கருணாநிதி விரிவான உரையாற்றினார். “அரசு அறிவிப்புப்படி சென்னை மாநிலத்தில் எட்டு . அமைச்சர்கள்தான் உண்டு. ஆனால் நடைமுறையில் ஒன்பதாவது அமைச்சரும் உண்டு. அந்த ஒன்பதாவது அமைச்சர் செல்லும் இடங்களில்தான் பெருங்கூட்டம் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/592&oldid=788410" இலிருந்து மீள்விக்கப்பட்டது