உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554, நினைவு அலைகள் "அவர்தான் கல்விக் கொள்கைகளையும், திட்டங்களையும் விளக்குவார். அவருடைய விளக்கத்தைத்தான் பெர்து மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். "-աւնւյւգ நடைமுறையில் அமைச்சராகக் கருதப்படுபவர் எவர்? அவரே பொதுக்கல்வி இயக்குநராகிய நெ.து. சுந்தரவடிவேலு. "அவருக்கு அவ்வளவு பெருமை இருப்பது பற்றி நாங்கள் பொறாமைப்படவில்லை. "ஆனால் பொதுக்கல்வி இயக்குநர் இரு பெரும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு ஆழமான பிரசாரம் செய்ய முயல்கிறார். “முதலாவதாக இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி, அவர் பேசாத கூட்டமே இல்லை. “இரண்டாவதாக 'இந்தியைப் படியுங்கள்’ என்று ஊர் தோறும் உரை ஆற்றி வருகிறார். இவ் விரண்டும் விவகாரத்துக்கு உரியது. பொதுக்கல்வி இயக்குநர் கருத்து தெரிவித்துக் கொண்டு வருவதை நாங்கள் கண்டிக்கிறோம். "அரசு இனிமேல் அப்படிச் செய்யாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கலைஞர் கருணாநிதி உரை ஆற்றினார். முதல்வரின் பதில் விவாதத்தின் இறுதியில் கல்வி அமைச்சர் மாண்புமிகு பக்தவத்சலம் நீண்ட விரிவான பதில் கூறினார். அப்படிக் கூறி வருகையில், கலைஞர் என் பேரில் சாட்டிய குற்றச்சாட்டுக்கும் பதில் கூறினார். “இந்திய தேசிய ஒருமைப்பாடு என்பது, திரு.கருணாநிதி கூறியதுபோல், அரசியல் விவகாரத்திற்கு உரியது அல்ல; நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள, அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று ஆகும். "எனவே, அதற்கு ஆதரவாகப் பொதுக்கல்வி இயக்குநர் பேசி வருவது அரசியல் அல்ல. தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை. “இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டும் என்பது நாடு முழுவதும் ஏற்றுக் கொண்ட கல்வித் திட்டம் ஆகும். l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/593&oldid=788411" இலிருந்து மீள்விக்கப்பட்டது