உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 நினைவு அலைகள் “நீங்கள் என்னிடம்தான் வேலை பார்க்கப் போகிறீர்கள். எனவே, உங்களைப் பற்றி நான் சரியாதப் புரிந்து வைத்திருக்கிறேன் என்பதுதான் முக்கியம். கோசல்ராம் பேசுவது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று என்னிடம் முதலமைச்சர் கூறினார். அப்புறம் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். 58. சில வேதனையான நிகழ்ச்சிகள் விட்ைத்தாள் எந்த ஊருக்குப் போயிருக்கிறது 1964இல் நடந்த சில வேதனையான நிகழ்ச்சிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. அவ் வாண்டு ஏப்ரல் திங்களில் மாநிலம் முழுவதும் பள்ளி இறுதித் தேர்வுகள் செம்மையாக நடந்து முடிவு அடைந்தன. சில நாள்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொது வாழ்வில் நல்ல பெயரோடு விளங்கி வந்த பெரியவர் ஒருவர், என் அலுவலகம் வந்தார்; என்னைப் பேட்டி கண்டார். பகல் உணவுத்திட்டம், சீருடை, பள்ளிச் சீரமைப்பு இயக்கம் ஆகியவற்றுக்குப் பெருந்துணையாக நின்றவர்களில் ஒருவர் அவர். எனவே, அவற்றைப் பற்றி நீண்டநேரம் பேசினார். அவர் செல்வாக்குள்ள பகுதிகளில் சில இடங்களில் இம் மூன்றும் உருவாகி வருவதாகவும், இவை முழுமை பெற்றதும் என்னை அழைக்கப் போவதாகவும் (மன் கூட்டியே சொல்லி வைத்தார். - இவ்வளவுக்குப் பிறகு தமது வேண்டுகோள் ஒன்றை என்னிடம் மெல்லத் தெரிவித்தார். "என் மகன் பள்ளி இறுதித் தேர்வு எழுதியுள்ளான். தந்தை என்ற முறையில் அவன் வெற்றி பெற வேண்டும் என்பது என் ஆவல். “அவன் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் அவ்வளவு நன்றாக எழுதவில்லை. அவன் தேர்வு எழுதிய மையமும், அவனுக்குரிய எண்ணையும் குறித்து வந்து இருக்கிறேன். "அந்த விடைத்தாள் எந்த ஊருக்குப் போயிருக்கிறது என்று தெரிந்தால், நான் சமாளித்துக் கொள்ளுவேன். யாருக்குப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/595&oldid=788413" இலிருந்து மீள்விக்கப்பட்டது