உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலவேதனையான நிகழ்ச்சிகள் 557 இருக்கிறது. என்று சொல்ல வேண்டாம். எந்த ஊருக்குப் போயிருக்கிறது என்பது மட்டும் தெரிந்தால் போதும். "நான் இரண்டு மூன்று நாள் கழித்துவந்து பார்க்கட்டுமா?” என்று அப்பெரியவர் எனக்குச் சங்கடமான நிலையை உருவாக்கிவிட்டார். என் பதில் “காவல்காரனிடமே இரும்புப் பெட்டி எங்கே இருக்கிறது என்று கேட்கலாமா? “தான் தேர்வு ரகசியங்களைக் காக்க வேண்டிய தலைமைக் காவலன் நிலையில் உள்ளேன். ங் ங் நான் எப்படி உங்கள் வேண்டுகோளை ஏற்க முடியும்?” என்று. மென்மையாக உரைத்தேன். o அவர் விடவில்லை. "நான் உங்களுக்கு வேண்டியவன்; உங்கள் நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்படும்படி விடமாட்டேன். = "தமிழ்நாட்டு அரசியலில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து நல்ல பெயரோடு இருக்கிறவன். பல ஆண்டுகளாக ஆளுங்கட்சிச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். o “இவ்வளவு அனுபவமுடைய என்னிடம் காதும் காதும் வைத்தமாதிரி சொல்லுங்கள். உங்கள் பெயர் வெளிக்கு வராமல் என் காரியத்தை முடித்துக் கொள்கிறேன்” என்று அவர் மென்மையாக வற்புறுத்தினார். நானும் பின்னடையவில்லை. . "ஐயா, அப்படி நான் ரகசியத்தை வெளியிட்டால் அது பெருங்குற்றம் ஆகும். நட்பு காரணமாகவும் நான் குற்றம் பரிய விரும்பவில்லை. “தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் இப் பேச்சை இதோடு விட்டுவிடுங்கள் நான் கிணற்றில் கல் போட்டால்போல ஒசைப்படாமல் இருந்துவிடுகிறேன்” என்று பதில் உரைத்தேன். அவர் அதற்குமேல் பேசாமல், என்னிடம் பழைய பரிவுடன் விடைபெற்றுக் கொண்டு போனார். நான் தவறான வேண்டுகோளை மறந்துவிட முயன்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/596&oldid=788414" இலிருந்து மீள்விக்கப்பட்டது