பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 நினைவு அலைகள் முதலமைச்சர் கேட்டார் சில நாள்களுக்குப் பிறகு நான் அலுவல் பற்றி முதலமைச்சரைக் கண்டபோது, அவர் எனக்கு வேண்டிய பெரியவரின் பெயரைக் குறிப்பிட்டு, இது பற்றிய பேச்சை எடுத்தார். "அவர் உங்களை வந்து பார்த்தாராமே, அவர் நல்ல மனிதர் ஆனாலும் சொந்த மகன் என்று வருகிறபோது கண்டிப்பு தளர்ந்துவிடுகிறது. "அவர் தம் மகன் தேர்ச்சி பெற உங்கள் உதவியை நாடியதைப் பற்றியும், நீங்கள் மறுத்துவிட்டதைப் பற்றியும் கூறி வருந்தினார்’ என்று முடித்தார். == நான், 'ஐயா, அப் பெரியவர் எனக்கும் வேண்டியவர்தான். என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்தான். இருப்பினும் நான் எப்படி ரகசியத்தை வெளியிட்டு உதவ முடியும்? "விருப்பு வெறுப்பு பாராமல் நேர்மையாக நடப்பவன் என்கிற் ஒரே மரியாதைதான் எனக்கு உள்ள சொத்து. அதையும் இழந்துவிட முடியுங்களா?” என்று பணிவோடு பதில் உரைத்தேன். முதலமைச்சர், “சரி, சரி; இந்தச் செய்தியை உங்கள் தகவலுக்காகச் சொன்னேன்”என்று சொல்லிவிட்டுப் பேச்சை வேறு அலுவல் பற்றித் திருப்பினார். நான் நிம்மதியாக விடைபெற்றுக் கொண்டேன். சில நாள்கள் சென்றன. மீண்டும் அதே தொல்லை ஒருநாள் இரவு 11 மணிக்கு நான் வெளியூரில் தங்கியிருந்த பயணிகள் விடுதியில் ஒருவர் என்னை எழுப்பிப் பேசினார். அவர், “முதலமைச்சர் ஆணைப்படி நான் உங்களை இந்த அகாலத்தில் எழுப்பிப் பேசுகிறேன். நாளை காலை 10 மணிக்கு நீங்கள் முதலமைச்சரைக் காணப் போகிறீர்களாம் "அப்போது முதலமைச்சர் தங்களிடம் ஒன்றைச் சொல்லுவார் அதை எப்படியாவது முடித்துக் கொடுங்கள். அது என் மகன் தேர்வு பற்றியது! அவன் நான்காவது முறையாகப் பள்ளி இறுதித் தேர்வு எழுதுகிறான். 'இம்முறை தவறிவிட்டால் மேற்கொண்டு தேர்வு எழுதவும் யாது. அவனைப் பற்றிய தகவலை லமைச்சர் காளை - o அ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/597&oldid=788415" இலிருந்து மீள்விக்கப்பட்டது