பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேதனையான நிகழ்ச்சிகள் 559 தங்களிடம் கொடுப்பார். எப்படியும் பார்த்துச் செய்யுங்கள்” என்று வந்தவர் என்னிடம் கூறினார். நான்,"இது அகாலம்! எனவே வணக்கம்” என்று மட்டுமே கூறி அனுப்பி வைத்தேன். திட்டமிட்டபடி விடியற்காலை புறப்பட்டுச் சென்னை சென்று அடைந்தேன். முதல்வரின் துண்டுச்சீட்டு உரிய நேரத்தில் முதலமைச்சரைக் கண்டேன்; அவர் முன்னிரவில் என்னை வந்து கண்டவரின் பெயரைச் சொல்லிவிட்டு, "இவர் உங்களைப் பார்த்தாரா?” என்று கேட்டார். “ஆம்: ஐயா! இரவு 11 மணிக்கு என்னை எழுப்பிப் பேட்டி கண்டார்” என்றேன். = "இவர் எனக்கு மிகவும் வேண்டியவர்” என்று கூறியதோடு, இவர் செய்த சில உதவிகளின் விவரங்களையும் நம்பிக்கையோடு என்னிடம் கூறினார். “தொடர்ந்து இவர் மகன் நான்காம் முறையாகப் பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருக்கிறான். இம் முறை ஒரு பாடத்தில் அவ்வளவு நன்றாக எழுதவில்லையாம்; அவனுக்கு உதவி செய்து தேர்ச்சி பெறச் செய்தால் நன்றாயிருக்கும்” என்று கூறிச் சீட்டு ஒன்றை என்னிடம் கொடுத்தார். வாங்கிப் படித்தேன். * பின்னர், "ஐயா, இதற்கு நான் என்ன செய்ய முடியும்? சில நாள்களுக்குமுன் இதேபோல் ஒருவர் தங்களிடம் வேண்டுகோள் விடுத்தார். என்னால், வழி செய்ய இயலுமானால், அப்போதே தங்கள் பரிந்துரையின் பேரில் பார்த்தைப் போட்டுவிட்டு, உதவ வந்திருப்பேன். “இத் தவறுகளைச் செய்ய என் மனம் இடம் கொடுக்கவில்லை. தயவுசெய்து, என்னை மன்னித்துவிடுங்கள்! மேலும் ஒரு உதவியை வேண்டுகின்றேன். நான் விடுப்பில் செல்ல அனுமதியுங்கள். “தேர்வுத் தொல்லைகள் முடிந்தபிறகு வேலைக்கு வருகிறேன்” என்று பணிவோடு பதில் உரைத்தேன். முதலமைச்சர் முகத்தில் சிறிதளவும் சினத்தைக் காணவில்லை; அவருக்கே உரிய தனிப்பொறுமையுடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/598&oldid=788416" இலிருந்து மீள்விக்கப்பட்டது