பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேதனையான நிகழ்ச்சிகள் 551 ஒர் உயர்மட்ட வல்லுநர் குழுவை நியமித்து, அவர்களுடைய பரிந்துரையைப் பெற்று, அதன் பேரில் இயக்குநர் முடிவு எடுக்க வேண்டும். அக் குழு எட்டு நூல்களைப் பரிந்துரைக்கும். இயக்குநர் அவற்றில் நான்கைத் தேர்ந்து எடுத்து அறிவிக்க வேண்டும். o பாதி மாவட்டங்களுக்கு இரண்டு நூல்களையும், மற்ற மாவட்டங்களுக்கு இரண்டு நூல்களையும் இயக்குநர் அறிவிப்பது அப்போதைய நடைமுறை. அந்த உயர்மட்டக் குழு ஒவ்வொரு ஆண்டும் அரசின் முன் ஒப்புதலோடு நியமிக்கப்படும். அதில் சில வேளை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இருந்ததுண்டு. 1954 முதல் 1963 வரை தமிழ்த் துணைப்பாட நூல் பற்றி எனக்கு மேலிடத்துத் தலையீடு இருந்ததில்லை. முதல்வரின் தலையீடு 1963ஆம் ஆண்டு முதல் முறையாக அத்தகைய தலையீடு இருந்தது. -- கல்வி அமைச்சரும், முதலமைச்சருமான மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் முதன்முறையாக இதைக் கவனிக்கவும்’ என்ற குறிப்போடு ஒரு நூலை எனக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த மறுநாளே முதலமைச்சரைப் பேட்டி கண்டேன். - - துணைப்பாட நூல்களைத் தேர்ந்து எடுக்கும் வழிமுறைகளை அவருக்கு விளக்கினேன். உயர்மட்டக் குழுவின் மதிப்பீட்டையோ, முடிவையோ இயக்குநர் தலையிட்டு மாற்றுவது கூடாது என்பதை எடுத்துரைத்தேன். அவர், “பழையபடியே நடக்கட்டும்: நீங்கள் தலையிட வேண்டாம்” என்று கட்டளையிட்டார். ஆனால், அடுத்து அடுத்து இதைக் கவனிக்கவும் என்ற குறிப்பு அவரிடமிருந்து வந்தது. மொத்தத்தில் எட்டு நூல்களுக்கு இப்படிப் பரிந்துரைத் திருந்தார். **

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/600&oldid=788419" இலிருந்து மீள்விக்கப்பட்டது