உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552. நினைவு அலைகள் உயர்மட்டக் குழுத் தேர்வுக்கு வந்த எல்லா நூல்களையும் அமைதியாகப் படித்துப் பார்த்ததும் எட்டு நூல்களை எனக்குப் பரிந்துரைத்தது. அந்தப் பட்டியலில் முதல் அமைச்சர் அனுப்பிய நூல் ஒன்று மட்டுமே இடம் பெற்றிருந்தது. மற்றவை அந்த தகுதி வரம்புக்கு வரவில்லை. அதையும் வேறு மூன்று. நூல்களையும் நான் தேர்ந்து எடுத்தேன். தேர்வு முடிவை இயக்குநரே அறிவிக்க வேண்டும். எந்த வெளியீட்டாளரின் நூல் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறதோ, அவருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்து விட்டு அரசுப் பதிவு இதழில் வெளியிட வேண்டும். அப்படியே செய்யப்பட்டது. அலுவலர் அனுப்பிய செய்தி ஏமாற்றம் அடைந்த ஒரு பதிப்பாளர் சீற்றம் கொண்டார். உதகமண்டலத்தில் தங்கி இருந்த முதலமைச்சரைத் தேடிச் சென்றார். அங்கேயே பல நாள் தங்கினார். எப்படியாவது தேர்ந்தெடுக்கப்பட்ட துணைப்பாடநூல் பட்டியலைத் திருத்தி, தம்முடைய நூல் அதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈடுபட்டார். பலரைக் கொண்டு முதலமைச்சருக்குச் சொல்ல வைத்தார். ‘எறும்பூரக் கல்லும் தேயும். முதலமைச்சர் தலையிட்டு அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தார். அங்கிருந்தபடியே, கல்விச் செயலகத்தின் மூத்த அலுவலர் ஒருவருக்குச் செய்தி அனுப்பினார். செய்தி என்ன? "இறுதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நான்கு நூல்களில் ஏதாவது ஒன்றை நீக்கிவிட்டு, நான் குறிப்பிடும் நூலைச் சேர்ந்து விட வேண்டும்.” சேர்ப்பதற்கான மேற்படி பதிப்பாளர் முயற்சி செய்த நூலின் பெயரை முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அச் செய்தி இயக்ககத்திற்கு வாய்வழி வந்தது. அன்று நான் வெளியூரில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/601&oldid=788420" இலிருந்து மீள்விக்கப்பட்டது