பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேதனையான நிகழ்ச்சிகள் * 563 மூத்த அலுவலரின் யுக்தி எனவே, என் நம்பிக்கைக்குரிய இயக்ககத்தின் அலுவலர் ஒருவர் எனக்கு உதவ ஒரு யுக்தியைக் கையாண்டார். ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நான்கு வெளியீட்டார் களுக்கும் எழுத்து மூலம் ஆணை அனுப்பினார். அன்று மாலைக்குள் குறிப்பிட்ட துணைப்பாட நூலின் இரண்டாயிரம் படிகளைக் கொண்டுவந்து நேரில் கொடுக்குமாறு அக் கட்டளை கூறிற்று. நால்வருமே தலா 2000 படிகளைக் கட்டிக் கொண்டுவந்து அலுவலரிடம் ஒப்படைத்து விட்டார்கள். எனவே, மூத்த அலுவலரின் தந்திரம் பலிக்கவில்லை. நான்கு நூல்களில் ஒன்றை எடுத்துவிடும் தவறைச் செய்வதற்கு எந்தச் சாக்கும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை நான் சென்னை திரும்பினேன். குறிப்பிட்ட அலுவலர் என்னைப் புகைவண்டி நிலையத்திலேயே கண்டார். என்னுடன் என் காரில் வந்தார். முதல்நாள் வந்த செய்திகளையும், தான் எடுத்த நடவடிக்கையையும் எடுத்துரைத்தார். அரசு அச்சகத்தோடு தொடர்பு கொண்டதில், துணைப்பாட நூல் பற்றிய அறிவிப்பு, அரசின் பதிவு இதழில் அச்சாகிவிட்டதாகக் கிடைத்த தகவலையும் கூறினார். தவறைச் செய்ய விரும்பினாலும் அந் நிலையில் செய்ய முடியாதே என்று வருந்தினார். “அதைப் பற்றி வருந்தவேண்டியது இல்லை, தவறே செய் யாமல் அதுவரை இயங்கியதுபோல் தொடர்ந்து நேர்மையாகவே நடப்போம்” என்று சொல்லி அனுப்பினேன். அவர் கல்விச் செயலகத்தில் உரிய அலுவலருக்கு முழு விவரத்தையும் எடுத்துக் கூறினார். அங்கிருந்து உதகமண்டலத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பழிவாங்கப்பட்டேன் -*. ஏமாற்றமடைந்த வெளியீட்டாளர் யானைக் குணம் உடையவர். பழி வாங்கத் துடித்தார். முதலமைச்சருக்கு வேண்டிய பலரைக் கொண்டு அவர்ை ஆத்திரம் ஊட்டிவிடும் முயற்சியில் முனைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/602&oldid=788421" இலிருந்து மீள்விக்கப்பட்டது