பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 நினைவு அலைகள் அதற்காக உதக மண்டலத்திலேயே பலநாள் தங்கினார் இரண்டொரு வாரங்கள் கழிந்தன. வதந்திகள் வந்தன. மே திங்கள் நடுவில் அன்றைய அரசியலில் பல வட்டாரங்களோடு தொடர்புடைய ஒருவர் என்னை அலுவலகத்தில் க்ண்டார். சில தகவல்களைக் கூறினார். “என் தந்தையாரோடு நீங்கள் அலுவல் பார்த்திருக்கிறீர்களாம். நீங்கள் நேர்மை, சத்தியம் தவறாதவர்கள். உங்களைப் படைத்த பிரம்ம்னே, கட்டளையிட்டாலும் தவறான செயலைச் செய்ய மாட்டீர்கள் என்பது அவருடைய மதிப்பீடு. அத்தகையோருக்கு ஒரு தீங்குவரப் போகிறது என்று நம் காதில் விழுந்தால் அதை அவருக்குத் தெரிவித்துவிடுவதே நல்லது. "அவர் மனம் புண்படாது; அதனால் அவர் நெறி தவறியும் போகமாட்டார் என்று என் தந்தையார் கூறியதால், நான் சில வேதனையான செய்திகளைச் சொல்லுகிறேன்” என்று பீடிகை போட்டுக் கொண்டு செய்தியைச் சொன்னார். தங்கள் மகன்களின் தேர்வு முடிவை மாற்றிக் கொள்ள முயன்று, ஏமாந்த பெரியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். துணைப்பாட நூலுக்கு முயன்று வெற்றி பெறாதவருடைய பெயரையும் குறிப்பிட்டார். இன்னும் சில பெயர்களையும் சொன்னார். "இவர்கள் எல்லாம் முதலமைச்சரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். 'அதன் விளைவாக உங்களிடமிருந்து பள்ளிக்கல்வி, பள்ளி இறுதித் தேர்வு, அத் தேர்வுக்கான துணைப்பாட நூல்களை முடிவு செய்தல் முதலிய அதிகாரங்களை எடுத்துவிடப் போகிறார்கள். “அதற்காக உயர்கல்வி இயக்குநர் பதவி ஒன்றைப் புதிதாக ஏற்படுத்தி அதில் உங்களை நியமிக்கப் போகிறார்கள். 'இம் முடிவு சில நாள்களில் வெளியிடப்படலாம்” என்று என்னைப் பேட்டி கண்டவர் என்னிடம் கூறினார். நான் அதைக் கேட்டுக் கலக்கம் அடையவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என் மனதுள் மூன்று வழிகள் மின்னின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/603&oldid=788422" இலிருந்து மீள்விக்கப்பட்டது